Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் புதன்கிழமை ஜூலை 14, 2021
Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் புதன்கிழமை ஜூலை 14, 2021 சென்னை:
பிலவ வருடம் ஆனி 30 ஆம் தேதி ஜூலை 14,2021 புதன்கிழமை. சதுர்த்தி திதி காலை 08.03 மணிவரை அதன் பின் பஞ்சமி. பூரம் மறுநாள் பின்னிரவு 03.42 மணி வரை அதன் பின் உத்திரம். சந்திரன் இன்றைய தினம் சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
மேஷம்
சந்திரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். குருவின் பார்வை ஐந்தாம் வீட்டில் உள்ள சந்திரன் மேல் படுவதால் இன்று உங்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் விற்பனை மூலம் நல்ல லாபம் கிடைக்கும். பங்குச்சந்தை முதலீடுகளில் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் நன்மைகள் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் உங்கள் புகழ் செல்வாக்கு மேலோங்கும்.
ரிஷபம்
சந்திரன் நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். மன நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும். நாள். சொத்து வாங்குவது தொடர்பாக பேசலாம். இன்று குடும்பத்தில் எதிர்பாராத சுப செலவுகள் அதிகமாகும். பிள்ளைகள் வழியில் சந்தோஷ செய்திகள் தேடி வரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நன்மையைத் தரும். தொழில் வியாபாரத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். முதலீடுகளுக்கு இரட்டிப்பு லாபம் பெருகும்.
மிதுனம் சந்திரன் மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு உறவினர்களால் உதவிகள் தேடி வரும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுபவர்க்கு புதிய கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பெண்கள் ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை இரண்டாம் மொழியாக சேர்க்க வேண்டும்.. திருச்சி சிவா கடிதம்
கடகம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்வதற்கான வங்கி கடன் எளிதில் கிடைக்கும். வெளியூர் பயணம் நன்மையைத் தரும். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும்.
சிம்மம்
சந்திரன் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். குருவின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைப்பதால் உங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் தேடி வரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபார வளர்ச்சிக்கான புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்.
கன்னி
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். கடன் பிரச்சினை தீரும்.
துலாம்
சந்திரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சொந்த தொழில் லாபத்தை கொடுக்கும். நீங்கள் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபார தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் நன்மை அதிகரிக்கும்.
விருச்சிகம்
சந்திரன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். வேலையில் கவனமும் விழிப்புணர்வும் தேவை. இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பிள்ளைகள் தம் பொறுப்பு அறிந்து செயல்படுவர். புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். புதிய தொழில் தொடங்குவது தொடர்பாக பேசலாம்.
தனுசு
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் நீங்கி வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும்.
மகரம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. இன்று நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு ஏகப்பட்ட தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும். குடும்பத்தினருடன் தேவையற்ற மனஸ்தாபம் ஏற்படும். வீண் பேச்சுக்களைத் தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும்.
கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். தம்பதியர் இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். மனதில் நிம்மதியும் சந்தோஷம் ஏற்படும். காரிய வெற்றி உண்டாகும் நாள்.
மீனம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறையும். உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும். உறவினர்களின் உதவி புது தெம்பையும் உற்சாகத்தையும் தரும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இரவு நேர பயணங்களைத் தவிர்த்து விடவும்.