கட்டப்பஞ்சாயத்து-கந்து வட்டிக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் தமிழக டி.ஜி.பி.சைலேந்திர பாபு எச்சரிக்கை
மதுரை , ஜுலை.14
காவல் துறை இயக்குநர் , தமிழ்நாடு சி.சைலேந்திர பாபு , மதுரை மாநகர் காவல் துறை அலுவலகத்தில் தென் மண்டல காவல் துறை உயர் அதிகாரிளுடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தினார் .
இதில் மதுரை மாநகர காவல் ஆணையாளர் தென்மண்டல காவல் துறை தலைவர் மற்றும் காவல் ஆணையர் , திருநெல்வேலி மாநகர் மதுரை , ராமநாதபுரம் , திண்டுக்கல் , திருநெல்வேலி சரக காவல் துறை துணைத் தலைவர்கள் . மதுரை , விருதுநகர் , திண்டுக்கல் , தேனி , ராமநாதபுரம் | சிவகங்கை , திருநெல்வேலி , தென்காசி , தூத்துக்குடி , கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பாளர் கள் மற்றும் மதுரை மாநகர காவல் துணை ஆணையர் ளும் கலந் கொண்டனர் . தென் மண்டலத்தில் ரவுடிகள் மோதும் சில சம்பவங்கள் நடந்துள்ளன ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் கடுமையான சட்டங்கள் அவர்களை தண்டிக்க ஆலோசனை வழங்கினார் . ரவுடிகள் மீது நடவடிக்கை ரவுடிகள் மீது உள்ள பழைய வழக்குகளை துரிதப்படுத்தி அவர்களுக்கு அதிகபட்ச தண்டணை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்து ரவுடிகளை சிறையிலடைக்க அறிவுரை வழங்கினார் . கந்து வட்டி கடும் நடவடிக்கை கட்டப்பஞ்சாயத்து கந்துவட்டி , கடத்தல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவர்களை தரம்பிரித்து அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார் . மதுரை மாநகரில் ஆயுதம் ஏந்திய இருச்சக்கர ரோந்து காவலர்களின் சிறப்பான பணியை பாராட்டினார் . சிறப்பாக பணியாற்றிய ஆயுதம் ஏந்திய காவலர்கள் முதல் நிலை காவலர் மாரிமுத்து , ஆயுதப்படை காவலர் 3123 காக்கரமுத்து முதல் நிலை காவலர் செந்தில் – ஆயுதப்படை காவலர் 2610 வெங்கடேஸ் பாபு , முதல்நிலை காவலர் சுந்தரமூர்த்தி , ஆயுதப் படை காவலர் கண்ண தாசன் முதல் நிலை காவல் செல்வக்குமார் மதுரை மாவட்ட காவல் துறையை சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் , சார்பு ஆய்வாளர் குமரகுரு லைமை காவலர்பாலசுப்பிரமணி , தலைமை காவலர் தார் வின் தலைமை காவலர் முருகன் , தலைமை காவலர் பிரகாஸ் மற்றும் சார்பு ஆய்வாளர் கே.ஆனந்த் , தலைமை காவலர் ராமர் , தலைமை காவலர் ஆசைத்தம்பி , முதல் நிலை காவலர் பிரகாஸ் மற்றும் காவலர் நாகேஸ்வாரன் ஆ யோருக்கு தலா ரூ 5000 / வெகுமதி வழங்கி அவர்களது பணியை பாராட்டினார் , கொரோனா மற்றும் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள தேனி மாவட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜோதிராஜ் குடும்பத்திற்கு உதவி தொகையாக ரூ 50000 / ஐ அவரது மகளிடம் வழங்கினார் . முன்னதாக மதுரை மாநகர காவல் துறை அலுவலகத்திற்கு வருகை புரிந்த காவல் துறை இயக்கு நர் தமிழ்நாடு அவர்களுக்கு மதுரை மாநகர காவல் துறை சார்பாக ஆயுதப்படை காவலர்களின் மரியாதை வழங்கப்பட்டது .
Attachments area