மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா காந்திநகர் நாடாளுமன்றத் தொகுதியில் ரூ.36 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களைத் தொடங்கி வைத்தார்
ஜெகநாதர் ரத யாத்திரை திருநாளில் அவர் நாட்டு மக்களுக்கு
வாழ்த்து தெரிவித்தார்
புதுதில்லி, ஜூலை 13, 2021
மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா காந்திநகர் நாடாளுமன்றத்
தொகுதியில் ரூ.36 கோடி மதிப்பில் அரசின் பல்வேறு வளர்ச்சி
திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
ஜெகநாதர் ரத யாத்திரை திருநாளில் நாட்டு மக்களுக்கு வாழ்த்து
தெரிவித்த அவர், அகமதாபாத்தில் உள்ள ஜெகநாதர் ஆலயத்தில் பல
ஆண்டுகளாக தான் வழிபாட்டுக்கு வருவதாகவும், ஒவ்வொரு
முறையும் புத்துணர்வு பெறுவதாகவும் அவர் கூறினார். இன்றைய
தினம் ஜெகநாதரை தரிசிக்கும் பேறு பெற்றதாகவும், அனைவருக்கும்
ஜெகநாதர் நல்லாசி வழங்குவார் என்றும் அவர் கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா இன்று காந்திநகர்
நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட நர்திப்பூர் கிராமத்தில் ரூ.25 கோடி
மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும்,
அவர் அதலாஜ் பகுதியில் சுவாமி நாராயண் கோவிலால் கட்டப்பட்ட
சாரதாமணி சமூதாயக் கூடத்தையும் திறந்து வைத்தார்.
யாருமே காலி வயிற்றுடன் உறங்கச் செல்லக்கூடாது என்ற அமைப்பு
கொண்ட கிராமத்துக்கு தான் வருகை புரிந்துள்ளதாகவும், இதன்
அமைப்பு மூலம் எந்த உயிரும் பட்டினியுடன் உறங்காது என்ற நிலை
ஏற்பட்டுள்ளதாகவும் திரு.அமித்ஷா கூறினார்.
காந்திநகரில் உள்ள 3 ஆயிரம் நபர்களுக்கு மேல் வசிக்கும் கிராமங்கள்
அனைத்திலும் 2024 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியை கொண்டுவர
தன்னிடம் திட்டம் உள்ளதாக திரு.அமித்ஷா தெரிவித்தார். இதனைத்
தொடர்ந்து, காந்திநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சன்
பவுன்டேஷன் அமைப்பால் உருவாக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி
நிலையத்தை திரு.அமித்ஷா திறந்து வைத்தார்கள். சன்
பவுன்டேஷனால் ஏற்படுத்தப்பட்ட இந்த ஆக்சிஜன் வசதி கொரோனா
தொற்றுக்கு எதிரான போரில் மக்களுக்கு வலுசேர்க்கிறது என்றும்,
இதனால் இங்குள்ளவர்கள் நீண்ட காலத்துக்குப் பயன்பெறுவார்கள்
என்றும் அவர் கூறினார்.
திரு.அமித்ஷா கொரோனா தொற்றில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு
ராஜ்பவனில் விருதுகளை வழங்கி கௌரவித்தார். கொரோனா
தொற்றுக்கு எதிரான இந்த போரில் பிரதமர் திரு.நரேந்திர மோடி
தலைமையில் அனைவரும் ஒன்றிணைந்து போரிட்டுள்ளதாகவும்,
இதில் ஒவ்வொருவருக்கும் முக்கியப் பங்குள்ளதாகவும் திரு.அமித்ஷா
கூறினார்.