புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உட்பட 6 அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு-
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட 6 அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல்வராக ரங்கசாமி பதவியேற்று 50 நாட்களுக்குப் பின்னரே அமைச்சர்கள் யார் என்பதே முடிவு செய்யப்பட்டு அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க.) அமைச்சர் நமச்சிவாயத்துக்கு உள்துறை இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் திரு என். ரங்கசாமி அவர்கள் தன வசம் ரகசிய மற்றும் அமைச்சரவைத் துறை,கூட்டுறவு, வருவாய் மற்றும் கலால் துறை,பொது நிர்வாக துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, இந்து சமய நிறுவனங்கள், வக்ஃப் வாரியம், உள்ளாட்சி நிர்வாகத்துறை, துறைமுகம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல்த்துறை, நகரம் மற்றும் திட்டமிடல், செய்தி மற்றும் விளம்பரத்துறை, மற்றும் வேறு எந்த அமைச்சர்களுக்கும் ஒதுக்கப்படாத பிற துறைகளையும் சேர்த்து இவர் கவனிப்பார்.
பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த திரு ஏ. நமச்சிவாயம் அவர்களுக்கு உள்துறையுடன் சேர்த்து மின்சாரம்,தொழில்கள் மற்றும் வர்த்தகம், கல்வி (கல்லூரிகல்விஉட்பட), விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள்,மற்றும் முன்னாள் ராணுவ வீரர் நலன் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியை சார்ந்த மூத்த தலைவர் திரு கே.லட்சுமிநாராயணன் அவர்களுக்கு பொதுப்பணித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது, பொதுப்பணித்துறையுடன், சுற்றுலா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து, மீன்வள மற்றும் மீனவர் நலன், சட்டம்,தகவல் தொழில்நுட்பம்,மற்றும் எழுதுபொருள் மற்றும் அச்சிடுதல் துறை ஒதுக்கப்பட்டுள்ளன.
அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியை சார்ந்த மூத்த தலைவர் திரு.சி.தேனீ ஜெயக்குமார் அவர்களுக்கு வேளாண்த்துறைஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும்கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை,வனம் மற்றும் வனவிலங்குத்துறை,சமூக நலன்,பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளன.
அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியை சார்ந்த திருமதி சந்திரா பிரியங்கா, போக்குவரத்துதுறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதி திராவிடர் நலன், போக்குவரத்து, வீட்டுவசதி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, கலை மற்றும் கலாச்சாரம் மற்றும் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவரத் துறையும் சேர்த்து ஒதுக்கப்பட்டுள்ளன.
பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த திரு ஏ.கே. எஸ்.ஏ.ஐ.ஜெ.சரவண குமார், சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் விவகாரதுறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் DRDA,சமூக மேம்பாடு, நகர்ப்புற அடிப்படை சேவைகள், தீயணைப்பு சேவைகள் மற்றும் சிறுபான்மை விவகாரங்கள் துறையும் சேர்த்து ஒதுக்கப்பட்டுள்ளன