Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 11, 2021

Loading

Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 11, 2021 சென்னை:

பிலவ வருடம் ஆனி 27 ஆம் தேதி ஜூலை 11,2021 ஞாயிற்றுக்கிழமை. பிரதமை திதி காலை 07.47 மணிவரை அதன் பின் துவிதியை. பூசம் இரவு 02.22 மணி வரை அதன் பின் ஆயில்யம். சந்திரன் இன்றைய தினம் கடக ராசியில் பூசம் நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் ஆரோக்கியமாக உணர்வீர்கள். நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கனவுகள் நனவாகும் நாள். சந்திர மங்கல யோகம், பிருகு மங்கல யோகம் கூடி வந்துள்ளதால் திடீர் பண வரவு வரும்.

ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் மூன்றாம் வீட்டில் உள்ளது. இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இளைய சகோதர, சகோதரிகளின் உதவியும் ஒத்துழைப்பும் கிட்டும். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த உதவிகள் எளிதில் கிடைக்கும். பயணங்களால் நன்மைகள் ஏற்படும்.

மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இரண்டாம் வீட்டில் மூன்று கிரகங்கள் கூடியுள்ளன. இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்க்கவும். தம்பதியர் இடையே விட்டு கொடுத்து சென்றால் இருக்கும் பிரச்சினைகள் சற்று குறையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும்.

கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் செவ்வாய் சுக்கிரன் உடன் இணைந்து பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். எடுக்கும் காரியங்களை தடையின்றி செய்து முடிப்பீர்கள். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் நன்மைகள் ஏற்படும்.

சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். வண்டி வாகனங்களால் சிறு விரயங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறையும் கவனமும் தேவை. தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை இருந்தாலும் வருமானம் ஓரளவு சிறப்பாக இருக்கும்.

கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் உற்சாகம் பிறக்கும்.

துலாம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். செய்யும் தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நல்ல பலன் கிடைக்கும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம் உண்டாகும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

விருச்சிகம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உங்கள் திறமைகள் மற்றவர்களால் பாராட்டப்படும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் தேடி வரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய பொருட்கள் வீடு தேடி வரும்.

தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். வீண் பிரச்சினைகள் உங்களை தேடி வரும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் நடைபெறுவதால் மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமுடன் பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம்தேவை. இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மந்த நிலையும் சோம்பேறித்தனமும் இருப்பதால் புதிய முயற்சிகளில் தலையிட வேண்டாம்.

மகரம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் நல்ல ஆர்வம் காட்டுவார்கள். திருமண பேச்சு வார்த்தைகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். புது வேலை விசயமாக முயற்சி செய்யலாம்.

கும்பம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் செவ்வாய் சுக்கிரன் உடன் பயணம் செய்வதால் கவனம் தேவை. குடும்பத்துடன் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். நோய்கள் பாதிப்புகள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்.

மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு திடீர் செலவுகள் வரும். பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் தோன்றும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனமும் நிதானமும் தேவை.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *