மயிலாப்பூர் பெண்ணாத்தூர் சுப்பிரமணிய ஐயர் பள்ளியில் படித்த முன்னாள் மாணவி 3 ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்
சென்னை, ஜூலை 10-
சென்னை மயிலாப்பூர் பெண்ணாத்தூர் சுப்பிரமணிய ஐயர் பள்ளியில் படித்த முன்னாள் மாணவி பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் மாணவி கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் விசாரணை நடத்துகின்றனர். 2004 – 2014 வரை 10 ஆண்டுகள் பி.எஸ். பள்ளியில் படித்தபோது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி புகார் அளித்துள்ளார். ஆசிரியர்கள் சிவக்குமார், வெங்கட்ராமன், ஞானசேகரன் வகுப்பறையில் தவறாக நடந்ததாக முன்னாள் மாணவி புகார் அளித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூர் அலமேழுமங்கள்புரத்தை சேர்ந்த இளம்பெண் கடந்த 2004 முதல் 2014ஆம் ஆண்டு வரை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடம் சாலையிலுள்ள பெண்ணாத்தூர் சுப்பிரமணியம் ஐயர் பள்ளியில் படித்துள்ளார். அப்போது அந்த பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்த சிவக்குமார், வெங்கட்ராமன், ஞானசேகரன் ஆகிய 3 பேரும் தன்னிடம் வகுப்பறையில் பலமுறை தவறாக நடந்து கொண்டதாக அந்த மாணவி புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரானது பெண்கள் மற்றும் ,குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையரிடம் இந்த இளம்பெண் புகார் கொடுத்துள்ளார்.
துணை ஆணையரின் பரிந்துரையின் பேரில் தற்போது மகளிர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். புகாருக்குள்ளான ஆசிரியர்கள் எத்தனை ஆண்டுகளாக இந்த பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் மீது மாணவிகள் ஏற்கனவே பள்ளி நிர்வாகத்தில் புகார் செய்துள்ளார்களா? பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த பள்ளியில் கண்காணிப்பு குழு உள்ளதா? அது முறையாக செயல்படுகிறதா? எனவும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
சென்னையில் ஏற்கனவே பத்மசேஷாத்ரி பள்ளி, சேத்துப்பட்டு மஹரிஷி வித்யாமந்திர் பள்ளி, தனியார் பள்ளி தற்காப்பு கலை பயிற்சியாளர்கள் என அடுத்தடுத்து பாலியல் புகாரில் கைதாகி வரும் வேளையில் தற்போது மயிலாப்பூரில் உள்ள பள்ளியின் 3 ஆசிரியர்கள் மீது முன்னாள் மாணவி பாலியல் புகார் கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது