“பெண்களுக்கான உதவி மையம்” ஈரோடு எஸ் .பி.,துவக்கிவைத்தார்
ஈரோடு ஜூலை 10
ஈரோடு மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் போன்ற குற்றங்கள் முற்றிலும் ஒழிக்கும் வகையில் பெண்களுக்கான உதவி மையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டது
மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ஆறு சுதாகர் ஐபிஎஸ் மற்றும் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் எம் எஸ் முத்துசாமி ஐபிஎஸ் மற்றும் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி சசிமோகன் ஐபிஎஸ் ஆகியோர் வழிகாட்டுதலின்படி
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு குற்றங்களை கையாளுவது குறித்து பிரத்தியேக பயிற்சி வழங்கப்பட்டது மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் குறைகள் சம்பந்தமாக மகளிர் காவல் உதவி மையத்தை அணுகலாம் என ஈரோடு மாவட்ட