மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகியவர்: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மகேந்திரன் இன்று தி.மு.க.வில் இணைகிறார்

Loading

சென்னை,

சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட யாருமே வெற்றிப்பெறவில்லை. இதையடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முக்கிய பிரமுகர்கள் பலரும் விலகுவதாக அறிவித்தனர்.

கட்சியில் இருந்து விலகியவர்களில் முக்கியமானவர் டாக்டர் ஆர்.மகேந்திரன். மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராக இருந்த இவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். ஆர்.மகேந்திரன் தி.மு.க.வில் இணைவார் என்று தொடர்ச்சியாக பேசப்பட்டு வந்தது.

இந்தநிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், ஆர்.மகேந்திரன் 75-க்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைய உள்ளார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *