பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத் துறையினரை முன்களப் பணியாளர்கள் என்று அறிவித்ததைத் தொடர்ந்து சிறப்பு தடுப்பூசி முகாம்
![]()
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத் துறையினரை முன்களப் பணியாளர்கள் என்று அறிவித்ததைத் தொடர்ந்து , சென்னை கலைவாணர் அரங்கில் ( 6.7.202 ) நேற்று பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமினை மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் . மு.பெ. சாமிநாதன் , மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் .மா.சுப்பிரமணியன் ” மற்றும் மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் .பி.கே.சேகர்பாபு , ஆகியோர் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்கள் . உடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் .தயாநிதி மாறன் , தமிழச்சி தங்கபாண்டியன் , பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் மரு.ஜெ.ராதாகிருஷ்ணன் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் செய்தித்துறை கூடுதல் இயக்குநர் தி.அம்பலவாணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர் .

