திரு ஷ்யாமா பிரசாத் முகர்ஜி: ஒருங்கிணைந்த இந்தியாவின் அறிவுரையாளர்
இந்தப் புனித பகுதியில் வளர்ந்த தொலைநோக்குப் பார்வை
கொண்ட தலைவர்களது எண்ணங்களின் இணைப்பே மனித
கலாச்சாரத்தின் எடுத்துக்காட்டாக விளங்கும் இந்தியாவின்
முன்மாதிரியான சரித்திர பயணமாகும். நவீன யுகத்திற்குப் பிந்தைய
இந்தியாவின் எண்ணம் சூழ்நிலைப்படுத்தப்பட்ட போது,
ஒருங்கிணைந்த இந்தியாவை கட்டமைப்பதற்கான தேசிய உணர்வு
நிலையை திரு ஷியாமா பிரசாத் முகர்ஜியின் நடவடிக்கை,
தொலைநோக்குப் பார்வை மற்றும் செயல்கள் வகுத்தன. அவரது
120வது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், நாம்
அனைவரும் மற்றும் எதிர்கால தலைமுறையினரும் அவரது
அறிவுக் கூர்மையை மேலும் நுட்பமாகப் புரிந்து கொள்வதற்கு
பொருத்தமான தருணமாக இது அமைகிறது.
ஆங்கிலேயே காலத்தில் வங்காள குடும்பத்தில் பிறந்த டாக்டர்
முகர்ஜி, ஆங்கிலேய அடக்குமுறையின் சமூக மற்றும் பொருளாதார
விளைவுகளையும், இந்திய கலாச்சாரம் மற்றும் மாண்புகளின்
மீதான எதிர்விளைவுகளையும் அவர் கண்டார். இதுபோன்ற மனதை
பதறவைக்கும் சூழ்நிலைகளும், தேசிய உணர்வைத் தட்டி எழுப்பும்
அவரது உறுதித் தன்மையும் அவருள் இருந்த தேசிய மாண்புகளுக்கு
மேலும் உயிர் ஊட்டியது. தொடக்க நாட்கள் முதலே, இந்தியா
பற்றிய எண்ணத்தில் உயரிய தெளிவை கொண்டிருந்த அவர்,
அனைத்து தளங்களிலும் தமது குரலை எழுப்ப செய்ததோடு சமூக
கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் வெகுஜன மக்களிடையே
தேசப்பற்றையும் விதைத்தார்.
தமது 26-வது வயதில் ஆங்கிலேய பல்கலைக்கழகங்களுக்கான
உச்சிமாநாட்டில் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக அவர்
கலந்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து தமது 33-வது வயதில்
கடந்த 1934 ஆம் ஆண்டு கல்கத்தாவின் இளம் துணைவேந்தராகவும்
அவர் பொறுப்பு வகித்தார். பெங்களூருவில் உள்ள இந்திய
அறிவியல் கழகத்தின் கவுன்சில் உறுப்பினராக அவரது பணியும்
குறிப்பிடத்தக்கது. அறிவுக் கூர்மையை வலுப்படுத்தும் மற்றும்
எதிர்காலத்தில் அறிவுசார் விஷயங்களில் ஆர்வமுள்ளவர்களது
லட்சியத்தை பூர்த்தி செய்யும் சூழலியலை அவரது புதுமையான
நிர்வாகம், கட்டமைத்தது.ஒருங்கிணைந்த இந்தியாவிற்காக
குரல் கொடுக்கும் தேசியஅறிவுரையாளராகவும், நிர்வாகம் சார்ந்த
கட்டமைப்பின் வாயிலாகஆங்கிலேயர்களால் விதிக்கப்பட்ட, வகுப்புவாத
பாகுபாட்டைநீக்குவதற்கு ஆதரவு அளித்தவருமாக டாக்டர் ஷ்யாமா பிரசாத்
முகர்ஜி தொடர்ந்து போற்றப்படுகிறார். 1941-42 ஆம் ஆண்டில்
வங்காளத்தின் முதல் அமைச்சரவையில் அவர் நிதி அமைச்சராக
பதவி வகித்தார்.
இந்து மகாசபையின் வங்காளப் பிரிவின் செயல்
தலைவராக 1940-ஆம் ஆண்டு செயல்பட்ட அவர், அதன் தேசியத்
தலைவராக 1944 ஆம் ஆண்டு உயர்வு பெற்றார். சகிப்புத்தன்மை
மற்றும் வகுப்புவாத மரியாதை ஆகிய இந்து மாண்புகளுக்கு அவர்
முதலில் முக்கியத்துவம் அளித்தார். எனினும், திரு முஹம்மத் அலி
ஜின்னாவின் முஸ்லீம் லீகின் வகுப்புவாத மற்றும்
பிரிவினைவாதத்திற்கு எதிரான கருத்தின் அவசியத்தையும் அவர்
பிறகு உணர்ந்தார்.
டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் மற்றும் டாக்டர் எஸ்பி முகர்ஜி
ஆகியோரின் செயல்களிலிருந்து அனுமதிக்கப்படும் ஒரு
நிலையான இசை வரைவு, ஒற்றுமையின் முக்கியத்துவம், சுதந்திர
நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பது பற்றிய எண்ணங்களை
வழங்குகிறது. சுதந்திர இந்தியாவின் தேசியவாத முயற்சிகளுக்கு
இடையூறாக இருந்த அன்றைய அரசின் தவறான கணிப்புகளாலான
கொள்கைகளை அவற்றின் திட்ட காலம் முதலே, இரு
தலைவர்களும் எதிர்த்து வந்தனர். தேசிய ஒற்றுமை சார்ந்த
விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்ததால் காங்கிரஸ் அல்லாத
அமைச்சரவை சகாக்கள் இருவரும் திரு நேருவின்
அமைச்சரவையில் இருந்து விலகியதோடு, நேரு-லியாகத்
ஒப்பந்தத்திற்கு முன்னதாக கடந்த 1950 ஆம் ஆண்டு
முன்னோடியாக, டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி
அமைச்சரவையில் இருந்து உடனடியாக விலகினார். அகதிகளின்
நல்வாழ்வுக்காக தம்மை முழுவதும் அர்ப்பணித்தல், உடன்
அவர்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்விற்காக பல்வேறு
பயணங்களையும் அவர் மேற்கொண்டார்.
அதன்பிறகு 1951 அக்டோபர் 21 அன்று பாரதிய ஜனசங்கை அவர்
நிறுவினார். இதுதான் உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியான
பாரதிய ஜனதா கட்சியாக இன்று வளர்ந்துள்ளது. பிரதமர் திரு
நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் அண்டை நாடுகளான
ஆப்கானிஸ்தான் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த
இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜெயின்கள், பார்சிகள் போன்ற
மதரீதியாக ஏற்படுத்தப்பட்ட சட்டவிரோத புலம்பெயர் மக்களுக்கு
உரிமைகள் மற்றும் நிவாரணங்களை வழங்கும் வகையில்
குடியுரிமை திருத்த சட்டம் 2019 அமைந்தது.
ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் இரு தலைவர்களும் இந்தியாவின்
ஒற்றுமையில் ஒத்த கருத்தை கொண்டுள்ளது, தெளிவான மற்றும்
ஒரே மாதிரியான எண்ணங்களில் வெளிப்படுகிறது. கடந்த 1951-52
ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் டாக்டர்
ஷ்யாமா பிரசாத் முகர்ஜியால் நடத்தப்பட்ட பிரஜா பரிஷத் மற்றும்
ஜனசக்தி அரசியல் கட்சி, டாக்டர் பி ஆர் அம்பேத்கர் இந்திய
அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 370 ஐ ரத்து செய்ததற்கு
இணையான நிலையை பின்பற்றியது. டாக்டர் ஷ்யாமா பிரசாத்
முகர்ஜி மற்றும் மாஸ்டர் தாரா சிங் ஆகியோரின் போராட்டம்தான்
பஞ்சாப் மற்றும் வங்காளத்தின் ஒரு பகுதி தொடர்ந்து இந்தியாவின்
ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்தது.
தேசிய ஒருமைப்பாட்டிற்கான காரணியாக டாக்டர் முகர்ஜியின்
தியாகம் அமைந்தது. “இரண்டு சட்டங்கள், இரண்டு குறிக்கோள்கள்,
இரண்டு தலைகள், ஒரு நாட்டில் இயங்காது” என்ற அவரது
முழக்கம் லட்சக்கணக்கான தேசியவாதிகளின் இதயங்களிலும்
மனங்களிலும் அழியாத சின்னமாக பொதிந்தது. அவரது தேசபக்தி
உடன் கூடிய தொலைநோக்குப் பார்வை நாட்டின் வரலாற்று
பயணம் முழுவதும் தேசியவாத உணர்வு நிலையை தொடர்ந்து
பற்ற வைத்துக் கொண்டே இருந்தது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு
அந்தஸ்து 2019, ஆகஸ்ட் 5ஆம் தேதி திரு மோடி அரசாங்கத்தால்
ரத்து செய்யப்பட்டதற்கு இது வழிவகுத்தது.
மகாபோதி சங்கத்துடனான டாக்டர் எஸ் பி முகர்ஜியின் தொடர்பும்
குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த சங்கத்தின் தலைவராக, பிற
நாடுகளுடனான இந்தியாவின் கலாச்சார உறவை மேலும்
வலுப்படுத்துவதில் அவர் சிறந்த பங்களிப்பை வழங்கினார்.
இங்கிலாந்திலிருந்து கொண்டுவரப்பட்ட பௌத்த கலைப் படைப்புகள்
மற்றும் நினைவுச் சின்னங்கள் 1949-ஆம் ஆண்டு பிரதமர் திரு
நேருவால் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு பௌத்த
மாண்புகளை அடிப்படையாகக் கொண்ட கலாச்சார உறவை
வலுப்படுத்துவதற்காக கலாச்சார தூதராக பர்மா, வியட்நாம்,
இலங்கை, கம்போடியா மற்றும் இதர தென் கிழக்கு ஆசிய
நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டார்.
பாந்திரா உள்ளாட்சித்தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு டாக்டர் அம்பேத்கரும்
பர்மாவிற்கு பயணம் செய்து 1954-ஆம் ஆண்டு வேசக் தினக்
கொண்டாட்டங்களைப் பார்வையிட்டார். தென்கிழக்கு
நாடுகளுடனான திடமான உறவை கட்டமைப்பதை நோக்கிய
அவர்களது விருப்பத்தை இந்தப் போக்கு எடுத்துக் காட்டுகிறது.
அறிவு சார்ந்த சூப்பர் பவர் ஆகவும் 21ஆம் நூற்றாண்டின்
உலகளாவிய தலைவராகவும் புதிய இந்தியாவை கட்டமைக்கும்
திரு மோடி அரசிற்கு டாக்டர் முகர்ஜியின் தொலைநோக்குப்
பார்வை வழிகாட்டியாக திகழ்கிறது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்
யூனியன் பிரதேசங்கள் வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்கின்றன.
மத்திய அரசு சட்டங்களின் அமலாக்கம், இந்தப் பகுதியில் வசிக்கும்
மக்களின் வாழ்வாதாரத்தை எளிமையாக்க உதவிகரமாக உள்ளது.
சமூகத்தின் பின்தங்கிய பிரிவு அரசின் பிராந்திய வளர்ச்சி
திட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் அரசியல்
கட்சி தலைவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி அண்மையில்
நிகழ்த்திய கூட்டம் அந்த பகுதியில் மேம்பாட்டிற்கு மேலும்
ஊக்கமளித்துள்ளது. சுமார் 7 ஆண்டு கால திரு மோடி அரசின்
பயணம், ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்,
அனைவரும் வளர்ச்சி அடைவோம்’ என்ற தொலைநோக்குப்
பார்வைக்கு இணங்க டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின்
கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
இந்திய தேசியவாதத்தின் வழிகாட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு
டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜிக்கு நாடு மரியாதை செலுத்தும்
வேளையில், ஒளிமயமான மற்றும் வலுவான தொடர்புடைய
அவரது உயரிய எண்ணங்கள் மற்றும் ஞானத்தை நாம்
நினைவுக்கூர்வோம்.
கட்டுரையை எழுதியவர்
– திரு அர்ஜுன் ராம் மேக்வால்,
நாடாளுமன்ற விவகாரங்கள் கனரக தொழில்கள் மற்றும் பொது
நிறுவனங்கள் துறையின் இணை அமைச்சர், ராஜஸ்தானின் பிகானர்
தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்