நாம் தமிழர் கட்சி சார்பில் தொழிலாளர் தொழிற்சங்க விரோதப் போக்கினை கடைபிடிக்கும் ஜென்கர் பசிபிக் ஆட்டோ இன்ஜினியரிங் நிர்வாக மேலாளர்களிடம் நீதிகேட்டு போராட்டம்

Loading

புதுச்சேரி, ஜூலை.05,
புதுச்சேரி திருபுவனை தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஜென்கர் பசிபிக் ஆட்டோ இன்ஜினியரிங் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஜென்னர் பசிபிக் ஆட்டோ இன்ஜினியரிங் தொழிலாளர்கள் நாம் தமிழர் தொழிற்சங்கம் தொடங்கிய ஒரே காரணத்தினால், ஜென்கர் பசிபிக் ஆட்டோ இன்ஜினியரிங் நிர்வாக மேலாளர்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தொழிலாளர் தொழிற்சங்க விரோதப்போக்கினை
கடைபிடித்து தொழிலாளர்களை மிரட்டி தொழிற்சங்கத்திலிருந்து
விலக வலியுறுத்தி கையெழுத்து பெறுவதும், தொழிற்சங்க நிர்வாகிகள் உறுப்பினர்களை ஒவ்வொரு பணிமுறையில்(Shift) இரண்டு இயந்திரங்களை இயக்க செய்து அதிக உற்பத்தியினை வழங்கவேண்டுமென தொழிலாளர்களை மன உளைச்சலுக்குள்ளாக்கி வருகிறது.
ஜென்கர் பசிபிக் ஆட்டோ இன்ஜினியரிங் தொழிலாளர்கள்,
நாம் தமிழர் தொழிற்சங்கம் நிர்வாகிகளின் மீது தொழிலாளர் தொழிற்சங்க விரோதப் போக்கினை கடைபிடித்து பணியிடமாற்றம்
செய்யும் ஜென்கர் பசிபிக் ஆட்டோ இன்ஜினியரிங் நிர்வாக மேலாளர்களிடம் நீதிகேட்டு போராட்டம் நடைபெற்றது.

இதில் தொகுதி செயலாளர் அய்யனார், தொகுதி தலைவர் ஜெயக்குமார் நிகழ்ச்சி ஒருங்கிணைத்தனர்.
நிகழ்ச்சிக்கு மாநில தொழிற்சங்க பாசறை செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார்.
AICCTU மாநிலத் தலைவர் மோதிலால், AIUTUC செயலாளர்
சிவகுமார் முன்னிலை வகித்தனர். மேலும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கௌரி, தேவிகா, திருக்குமரன், மகளிர் பாசறை
தொகுதி நிர்வாகிகள் பிரியன், காமராஜ், மணிபாரதி, செந்தமிழன், பெரிய குமரன், தனசேகர், வினோத், பிரசாத், முத்துக்குமார், துரை
இளம்பரிதி, விகே சங்கர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *