‘ஆள் கடத்தல் (தடுப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு) மசோதா 2021’ குறித்த கருத்துகள் வரவேற்பு
புதுதில்லி, ஜூலை 04, 2021
‘ஆள் கடத்தல் (தடுப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு) மசோதா 2021’ குறித்து
பங்குதாரர்கள் அனைவரின் கருத்துக்களையும் மகளிர் மற்றும் குழந்தைகள்
மேம்பாட்டு அமைச்சகம் வரவேற்றுள்ளது. தனி நபர்களை, குறிப்பாக பெண்கள்
மற்றும் குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுத்து, பாதிக்கப்பட்டவர்களின்
உரிமைகளுக்கு மரியாதை வழங்கி, அவர்களுக்கு பாதுகாப்பு, ஆதரவு மற்றும்
மறுவாழ்வு அளித்து, ஆதரவான சட்ட, பொருளாதார மற்றும் சமூக சூழலியலை
அவர்களுக்கு உருவாக்குவதுடன், குற்றவாளிகள் மீது வழக்கு தொடுப்பதை உறுதி
செய்வது இந்த மசோதாவின் நோக்கமாகும். இந்த மசோதா இறுதி செய்யப்பட்ட
பிறகு, அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அதைத்தொடர்ந்து
சட்டமாக இயற்றுவதற்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலை
பெறுவதற்காக அனுப்பப்படும். எல்லை தாண்டிய செயல்கள் அடங்கிய ஆள்கடத்தல்
தொடர்பான ஒவ்வொரு குற்றத்திற்கும் இந்தச் சட்டம் பொருந்தும்.
14.07.2021 ஆம் தேதிக்குள் santanu.brajabasi@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு
இந்த மசோதா குறித்த கருத்துக்களை அனுப்பலாம்.