ஆபாச மெசேஜ் அனுப்பியவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி நடிகை சனம் ஷெட்டி புகார்
இன்ஸ்டாகிராமில் ஆபாச மெசேஜ் அனுப்பியவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி நடிகை சனம் ஷெட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்
சென்னை
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகை சனம் ஷெட்டி.பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சனம் ஷெட்டி தனது புகைப்படங்களை தினமும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் சென்னை திருவான்மியூரில் வசித்து வரும் சனம் ஷெட்டி இன்ஸ்டாகிராமில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனக்கு ஆபாசமான மெசேஜ்களை அனுப்பி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட திருவான்மியூர் போலீசார், அதை சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.