அமெரிக்காவின் சுதந்திரதினத்தையொட்டி ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
புதுடெல்லி,
அமெரிக்காவின் 245- வது சுதந்திர தினமான இன்று (04/07/2021) அந்நாட்டில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, வர்த்தக நகரமான நியூயார்க் சிட்டியில் மக்கள் சுதந்திர தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றன.
அதேபோல், உலக நாடுகளின் தலைவர்களும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பிரதமர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
245-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கள். துடிப்பான ஜனநாயக நாடுகளாக, இந்தியாவும் அமெரிக்காவும் சுதந்திரம் மற்றும் விடுதலையின் மாண்புகளை பகிர்கின்றன. நமது கேந்திர கூட்டணி, உண்மையான சர்வதேச முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது என பதிவிட்டுள்ளார்.