காட்பாடி ரயில் நிலைய மேலாளர் கொரோனா நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் ரவீந்தரநாத் துவக்கிவைத்தார் .

Loading

வேலூர் ஜூலை 3

வேலூர் மாவட்டம் காட்பாடியில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி வேலூர் மாவட்ட நிர்வாகமும், வேலூர் மாநகராட்சியும், காட்பாடி வட்ட ரெட்கிராஸ் சங்கமும், இணைந்து 15வது முறையாக கொரோனா நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 03.07.2021 காலை 9.30 மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், தலைமை தாங்கினார். மேலாண்மைக்குழு உறுப்பினர் எ.ஶ்ரீதரன் முன்னிலை வகித்தார்.காட்பாடி ரயில்வே ஜங்ஷன் நிலையத்தின் மேலாளர் கே.ரவீந்தரநாத் துவக்கி வைத்து இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.பள்ளிகுப்பம் அரசு நகர்புற சுகாதார நிலையைத்தின் மருத்துவ அலுவலர் வெங்கடலட்சுமி அவர்கள் தலைமையில் மருத்துவர் சரிதா செவிலியர்கள் ஹேமலதா, சீதா கணினி இயக்குபவர் கல்பான குழுவினர் தடுப்பூசிகளை செலுத்தினர்.காட்பாடி ரயில்வே சாரண ஆசிரியர் கே.பூபாலன், காட்பாடி ரெட்கிராஸ் மருத்துவ குழுத்தலைவர் டாக்டர் வீ.தீனபந்து, மேலாண்மைக்குழு உறுப்பினர் எ.ஆனந்தகுமார்,லயன்.என்.பிரகாஷ், தணிகை செல்வம், திருமகள் செல்வமணி, தன்னார்வ தொண்டர்கள் செ.ஜ.சோமசுந்தரம், எஸ்அஜய்குமார், உள்ளிட்டோர் பங்கேற்று சமூக இடைவெளியை பின்பற்றுதல், முக கவசம் அணிந்து வருகை தருதல் சானிடைசர் வழங்குதல் போன்ற பணிகளை செய்து பொதுமக்களை ஒழுங்குபடுத்தினர்.இம் முகாமில் கோவிஷீல்டு 103 பேருக்கும் மற்றும் கோவேக்சின் 42 பேருக்கும் என மொத்தம் தடுப்பூசிகள் 145பேருக்கு செலுத்தப்பட்டது.

0Shares

Leave a Reply