காட்பாடி ரயில்நிலையத்தில் 42 கிலோ கஞ்சா பறிமுதல்.
வேலூர். ஜூலை 3
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்நிலையம் வழியாக வந்த ரயில் 42 கிலோ கஞ்சாவை குற்றப்புலனாய்வு துறையினர் கைப்பற்றினர்.விசாகப்பட்டினத்திலிருந்து கேரளா செல்லும் கொல்லம் விரைவு ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக குற்றப்பிரிவு புலனாய்வு துறை ஆய்வாளர் மதுசூதனனுக்கு தகவல் கிடைத்தது.காவல்துறை குழுவினர் காட்பாடிக்கு வந்த ரயிலில் சோதனை செய்தபோது பயணிகள் பெட்டியில் ஆங்காங்கே 4 மூட்டைகளில் கேட்பாரற்று கிடந்த 42 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து
காட்பாடி ரயில்வே பாதுகாப்பு படையிடம் ஒப்படைத்தனர்.