பாலக்கோடு அருகே 20கோடி மதிப்பில் கட்டப்பட்ட குளிர்பதன கூடாரம்மழையில் சரிந்தது

Loading

பாலக்கோடு அருகே 20கோடி மதிப்பில் விவசாயிகள் பயன்பாட்டுக்கு கட்டப்பட்டு வரும் குளிர்பதன கூடாரம் நேற்று பெய்த மழைக்கு கட்டட சுவர் மற்றும் பில்லர் இடிந்து விழுந்தது. மழையில் சரிந்த பில்லர் மற்றும் சுவர்களை ஆட்களை வைத்து ஜேசிபி எந்திரம் மூலம் அள்ளும் பணி நடைபெற்று வருகிறது.

பாலக்கோடு.ஜூலை.2-
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் கரகதஅள்ளி கிராமத்தில் ரூ.20 கோடி மதிப்பில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் பதப்படுத்தி வைக்கும் வகையில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படுகிறது. இதற்காக முதற்கட்டமாக ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான கட்டுமான பணிக்கு பூமி பூஜையை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்போதை அதிமுக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார். 100 அடி அகலம், 200 அடி நீளம் கொண்ட குளிர்பதன கிடங்கு கட்டிட பணிகள் தொடர்ந்து நடந்து வந்தது. 15 அடி உயரத்திற்கு கம்பிகளுடன் சிமெண்ட் சுவர் கட்டப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று கரகதஅள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழை, காற்றுக்கு, குளிர்பதன கிடங்கிற்காக கட்டபட்டிருந்த 15 அடி சுவர் இடிந்து விழுந்தது. மழையால் நேற்று கட்டுமான பணிகள் நடைபெறவில்லை. ஆட்கள் யாரும் அங்கு இல்லாததால் உயிர் சேதம் தவீர்க்கப்பட்டது. அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விலை குறைவாக இருக்கும் போது, குளிர்பதன கிடங்கில் பதப்படுத்தப்பட்டு, உரிய விலை கிடைக்கும் போது விற்பனை செய்யலாம். விவசாயிகளின் நலனுக்காக அமைக்கப்பட்டு வரும் இந்த குளிர்பதன கிடங்கு கட்டுமான பணிகள் வலுவிழந்த கம்பிகள், தரமற்ற எம்சன்டு, சிமெண்ட் மூலம் அமைக்கப்படுவதால், மழை, காற்று சரிந்துள்ளது. கட்டுமான பணிகள் முடிந்த விளைபொருட்கள் இங்கே பதப்படுத்தி வைக்கும் போது பெரிய அளவில் விபத்துககள் ஏற்பட்டிருந்தால், பொருள் இழப்புடன், உயிரிழப்பு நிகழ்ந்திருக்கும். அதிக கமிஷன் கொடுத்து அரசு பணிகள் எடுக்கும் ஒப்பந்ததார்கள், தரமற்ற முறையில் பணிகள் மேற்கொண்டு வருவதாக இதுவே சிறந்த உதாரணமாக உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து, குளிர்பதன கிடங்கு பணியின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *