திருவள்ளூர் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள்

Loading

திருவள்ளூர் ஜூலை 02 : திருவள்ளூரில் உள்ள ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளையும், அரசு மருத்துவமனைகள் மற்றும் சமுதாய தன்னார்வலர்களுக்கு மருத்துவ கருவிகளையும், கோவிட் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவத்துறையுடன் இணைந்து பொது மக்கள் மத்தியில் செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு அங்கமாக கச்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமும்,கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் மிகவும் நலிவடைந்த 2 ஆயிரம் குடும்பங்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பை தைவான் வெளியுறவுத்துறை அமைச்சகம், குழந்தைகள், குடும்பங்களுக்கான தைவான் நிதி மற்றும் சில்ரன் பிலீவ் நிறுவனத்துடன் ஆகியோர் உதவியுடன் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவத்துறை இணைந்து வழங்கும் முதல் கட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார். பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து மாற்றுத்திறனாளிகளும்,பொதுமக்களும் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவத்துறை, வசந்தம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு ஐ.ஆர்.சி.டி.எஸ் மற்றும் சில்ரன் பிலீவ் இணைந்து இந்த முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் 151 பேருக்கும் மற்றும் 20 மாற்றுத்திறனாளிகள் உட்பட 171 பேருக்கு கொரோனா நிவாரண ஊட்டச்சத்து பொருட்களான 5 கிலோ அரிசி,பருப்பு, சமையல் எண்ணெய்,காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினார்.

இதில் பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் டி.கே.சந்திரசேகர், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், வட்டார மருத்துவ அலுவலர் பால மணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம வளர்ச்சி கமிட்டி பிரதிநிதிகள், ஐ.ஆர்.சி.டி.எஸ் திட்ட மேலாளர் ஸ்டீபன், திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயன், கள ஒருங்கிணைப்பாளர் தினகரன், வசந்தம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு தலைவர் லிவிங்ஸ்டன், செயலாளர் ஜெயசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்

0Shares

Leave a Reply