கோயம்பேடு பகுதியில் கூட்டுக்கொள்ளையிடுவதற்கு திட்டமிட்டு கத்தியுடன் பதுங்கி இருந்த 3 நபர்கள் கைது.
சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை
கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு
குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், சென்னை
பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., உத்தரவின்பேரில்,
பொது
அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில்
ஈடுபடுவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, குற்றங்களில் ஈடுபடுபவர்களை காவல்
ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, சட்ட
விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து
வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, K-10 கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர்
தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (30.06.2021) அதிகாலை சுமார் 04.30
மணியளவில் பூந்தமல்லி நெடுஞ்சாலை சீமந்தம்மன் கோயில் பின்புறம் கண்காணிப்பு
பணியில் இருந்தபோது, அங்கு மறைவான இடத்தில் பதுங்கியிருந்த 3 நபர்களை பிடித்து
விசாரணை செய்தபோது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர்.
சந்தேகத்தின்பேரில் அவர்களை சோதனை செய்தபோது 2 கத்திகள் மறைத்து
வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் மேற்படி 3 நபர்களும் கோயம்பேடு
பகுதியில் வரும் வியாபாரிகளிடம் கொள்ளையிடுவதற்கு திட்டமிட்டு கத்தியுடன்
இருந்தது தெரியவந்தது.
அதன்பேரில் கத்தியுடன் கூட்டுக் கொள்ளையிடுவதற்கு திட்டமிட்டு ஆயத்தமாகி
இருந்த 1.மிட்டாய் விக்கி (எ) விக்கி, வ/24, த/பெ.அஜித், அல்லிக்குளம் பிளாட்பாரம்,
சென்னை, 2.மதன்குமார், வ/24, த/பெ.மணி, எண்.53, சிவன் கோயில் தெரு, 3வது
செக்டார், கோயம்பேடு, சென்னை, 3.அருண், வ/24, த/பெ.ஜெயராமன், எண்.53, சிவன்
கோயில் தெரு, 3 வது செக்டார், கோயம்பேடு, சென்னை ஆகிய 3 நபர்களை கைது
செய்தனர். அவர்களிடமிருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணைக்குப் பின்னர், கைது செய்யப்பட்ட 3 நபர்களும், நேற்று (30.06.2021)
நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில்
அடைக்கப்பட்டனர்.