கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதியில் சாராயம் காய்ச்சுவதை தடுக்கும் வகையில் மதுவிலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Loading

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதியில் சாராயம் காய்ச்சுவதை தடுக்கும் வகையில் மதுவிலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மதுவிலக்கு ஆய்வாளர் பிரபாவதி தலைமையில் கல்வராயன் மலைப் பகுதியில் தேடுதல் வேட்டையின் போது வெள்ளிமலை ரோட்டில் முருகன் கோவில் பஸ் ஸ்டாப் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவரை சந்தேகத்திற்கிடமாக சோதனை செய்தனர்.
அதில் ஒரு சரக்கு பையில் ஆறு பெட்டி 72 எண்ணிக்கையுள்ள மதுபாட்டில்கள் கடத்திச் சென்றது தெரியவந்தது.
அவர்களை விசாரித்தபோது எருக்கம் பட்டை சேர்ந்த அண்ணாமலை மகன் பிரபு வயது 27 மற்றும் சந்திரன் மகன் தாமோதரன் வயது 27 என்பது தெரியவந்தது.
இருவரும் அரசு அனுமதியின்றி மது பாட்டில்களை கடத்திச் சென்றபோது
பிடிபட்டுள்ளனர்.

கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் கடத்தப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

0Shares

Leave a Reply