Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் – செவ்வாய்க்கிழமை ஜூன் 29, 2021

Loading

Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் – செவ்வாய்க்கிழமை ஜூன் 29, 2021 சென்னை:

பிலவ வருடம் ஆனி 15 ஆம் தேதி ஜூன் 29,2021 செவ்வாய்க்கிழமை. பஞ்சமி திதி பகல் 01.23 மணிவரை அதன் பின் சஷ்டி திதி. சதயம் இரவு 01.02 மணி வரை அதன் பின் பூரட்டாதி. சந்திரன் இன்றைய தினம் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் லாப ஸ்தானத்தில் குரு உடன் இணைந்து பயணம் செய்கிறார். குரு சந்திர யோகம் இணைந்துள்ளது. வியாபாரத்திற்கான வங்கி கடன் எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். புத்திர வழியில் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். பண வருமானம் அதிகரிக்கும். இன்று மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையில் பல புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்
சந்திரன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உத்தியோகஸ்தர்கள் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பெண்களின் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.

ஆனி மாதத்தில் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும் ஆனி மாதத்தில் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்

மிதுனம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். திடீர் பணவரவு வரும். உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். உறவினர்கள் மூலம் நல்ல செய்தி தேடி வரும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் பிரச்சினை நீங்கும்.

கடகம்
சந்திரன் இன்றைய தினம் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். அஷ்டம குரு உள்ள நிலையில் சந்திரனும் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை. செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் தள்ளி வைப்பது நல்லது.

சிம்மம்
சந்திரன் இன்று உங்கள் வீட்டிற்று ஏழாம் பயணம் செய்கிறார். குருவின் பார்வையுடன் சந்திரன் பார்வையும் இணைந்து கிடைக்கிறது. மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியடையும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். திடீர் வருமானம் வரும் வங்கி சேமிப்பு உயரும்.

கன்னி
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத விதமாக திடீர் தனவரவு உண்டாகும். கடன் பிரச்சினை நீங்கும்.

துலாம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பொருளாதார பிரச்சினைகள் நீங்கும் மன நிம்மதி உண்டாகும். வியாபார ரீதியாக ஏற்பட்ட பண நெருக்கடிகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இருந்த சிக்கல்கள் தீரும். திறமைக்கேற்ற பலன்கள் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் வழியில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

தனுசு
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். வேலை செய்யும் இடத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். ஆலய தரிசனம் மன அமைதியைத் தரும்.

மகரம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். மன நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். இன்று உங்களுக்கு பொருளாதார நிலை நன்றாக இருக்கும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பயணங்களால் நன்மைகள் ஏற்படும்.

கும்பம்
சந்திரன் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தொழில் ரீதியான புதிய முயற்சிகள் கை கூடி வரும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பண வருமானம் அதிகரிக்கும். வங்கி சேமிப்பு உயரும்.

மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உடல்நிலையில் ஏற்பட்ட மந்த நிலை மாறி சுறுசுறுப்பு உண்டாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். தொழில் வியாபாரத்திற்காக வங்கி கடன் வாங்க நேரிடும். தொழிலில் செய்யும் முதலீடுகளால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *