தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் 50 ஆயிரம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது..
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையாறு அரசு அரசு மருத்துவமனை மற்றும் குத்தாலம் தாலுக்கா கோமல் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது
இதில் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கலந்துகொண்டு பொறையார் மற்றும் கோமல் அரசு மருத்துவமனைக்காக ரூபாய் 50 ஆயிரம் மதிப்பிலான முக கவசம், பல்ஸ் மானிட்டர், பிரஸர் மானிட்டர், ஸ்டேதெஸ் ஸ்கோப், டேபிள் பேன், கூரை பேன், கை உறை, சானிடைசெர், நெபுளைசெர், டிஜிட்டல் பல்ஸ் மீட்டர்,
கட்டில் தலையணை உள்ளிட்ட
கொரோனா அவசரகால மருத்துவ உபகரணங்களை முதன்மை மருத்துவ அலுவலர் ஹஃசா சுல்தானா இடம் வழங்கினார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாநில செய்தி தொடர்பாளர் வெங்கடேசன் மாவட்ட செயலாளர் புகழேந்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம் கே செந்தில் குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஜெயக்குமார் வரவேற்புரை ஆற்றிய பேசினார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் செம்பை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் அப்துல்மாலிக், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்எம் சித்திக், மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் பிஎம் ஸ்ரீதர், ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைமை நிலைய செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட துணை தலைவர் காந்தி, மாவட்ட துணை செயலாளர் ஜெய்சங்கர், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜலிங்கம், மாவட்ட மகளிரணி செயலாளர் மீரா காந்தி, செம்பனார்கோவில் ஒன்றிய சங்க தலைவர் ராஜதிலகர், செயலாளர் பெனடிக் ட்பிளேவியன், பொருளாளர் கண்ணன், அமைப்பாளர் முருகானந்தம், குத்தாலம் ஒன்றிய சங்கத் தலைவர் பார்த்திபன், செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் பாலமுருகன், அமைப்பாளர் தண்டபாணி, செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார் மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்தின் பொறுப்பாளர்கள், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்...
நிறைவாக மாவட்ட பொருளாளர் மகேஷ் நன்றி கூறினார்….