திருவள்ளூர் வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் 62 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டது : அரசின் விதிமுறைகளை கடைபிடித்து பக்தர்கள் சாமி தரிசனம்

Loading

திருவள்ளூர் ஜூன் 28 : தமிழகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனையடுத்து கடந்த ஏப்ரம் மாதம் 27-ந் தேதி முதல் அனைத்து மதக் கோயில்களும் மூடப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.

அதனையடுத்து அனைத்து கோயில்களும் மூடப்பட்டு, கோயிலுக்குள் பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தன. பக்தர்கள் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது திருவள்ளூர் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்ததால் கோயில்கள் திறக்கவும், பக்தர்கள் தரிசனம் செய்யவும் அனுமதி அளித்து உத்தரவிட்டது. அதனையடுத்து கடந்த 2 நாட்களாக கோயில் சுத்தம் செய்யப்பட்டது.

அரசின் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூரில் உள்ள பிரசித்தி பெற்ற வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் நடை திறக்கப்பட்டது. காலை 6 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 9 மணியளிவில் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் அனைவரும் கை, கால்களை சுத்தம் செய்த பிறகு, வெப்பமானி மூலம் பரிசோதனை செயய்ப்பட்ட பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் சமூக பாதுகாப்பை கடைபிடிக்கும் வகையில் இடைவெளி விட்டு நிற்க வைத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 62 நாட்களுக்குப் பிறகு கோயில் திறக்கப்பட்டிருந்தாலும், இலேசான மழை பெய்து வருவதால் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது.

அதே போல் கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஏப்.9 ம் தேதி முதல் அனைத்து மதக் கோயில்களும் மூடப்படும் என அரசு அறிவித்தது. அதனையடுத்து அனைத்து கோவில்களும் மூடப்பட்ட நிலையில் தற்போது தொற்று பாதிப்பு குறைந்ததால் கோயில்களை திறக்க அரசு அனுமதி அளித்தது. அதன்படி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கடந்த 62 நாட்களுக்கு பிறகு கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்

0Shares

Leave a Reply