உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி பொதுமக்களுடைய ஆலோசனை கூட்டம்
உளுந்தூர்பேட்டை ஜூன் 28
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மணிமொழியன் அவர்கள் திருநாவலூர் பொது மக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் சிறப்புரை ஆற்றினார்.
இதில்பொது மக்கள் எவ்வாறு காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் சட்டம் ஒழுங்கைப் பேணி காக்க வேண்டும் என்பது பற்றியும் திருநாவலூர் கெடிலம் ஆற்றங்கரையில் உள்ள மணல் கொள்ளையைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் மேலும் ஒவ்வொரு பொதுமக்களும் ஒவ்வொரு காவல் துறையைச் சார்ந்தவர்கள் என்ற வகையில் உரையாற்றி ஒவ்வொருவரும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தந்து ஆற்றுமணல் கொள்ளை மற்றும் கரோனாவில் எப்படி பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றியும் சிறப்புரையாற்றி காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இருக்கும் நல்லுறவையும் பொது மக்கள் எவ்வாறு பேணிக் காக்க வேண்டும் என்பது பற்றி சிறப்புரை ஆற்றி சென்றார், மேலும் அவர் தான் நடத்தும் இதுவே முதல் கூட்டம் என்றும் எனவே இக் கூட்டத்தின் மதிப்பை அறிந்து தாங்கள் அனைவரும் தனக்கு மதிப்பளித்து காவல்துறைக்கு நல்வழிப் வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார் உடன் காவல் ஆய்வாளர் சீனிவாசன், உதவி ஆய்வாளர் குருபரன், பால முரளி ஆகியோர் உடனிருந்தனர்