திருவள்ளூர் மாவட்டத்தில் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு மானியத்துடன் கடனுதவி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

Loading

திருவள்ளூர் ஜூன் 27 : தமிழக அரசு படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி பொருளாதார முன்னேற்றம் அளிக்கும் பொருட்டு படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தினை உருவாக்கியுள்ளது. அதன்படி, 139 நபர்களுக்கு ரூ.125.00 இலட்சம் மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் 195 நபர்களுக்கு ரூ.125 இலட்சம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிக பட்சமாக 35 வயது பொது பிரிவினருக்கும், 45 வயது சிறப்பு பிரிவினருக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தப்பட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அதிகப்பட்சம் உற்பத்தி தொழிலுக்கு ரூ.15 இலட்சமும், சேவை மற்றும் வியாபாரத்திற்கும் ரூ.5 இலட்சமும், கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். உற்பத்தி தொழிலுக்கான திட்ட மதிப்பு ரூ. 15 இலட்சமாக வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேர்காணல் மற்றும் பயிற்சியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.திட்ட மதிப்பில் 25 சதவிகிதம் மானியம் ரூ. 2.50 இலட்சமாக வழங்கப்பட்டு வருகிறது.

தகுதியுள்ள நபர்கள் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்து விண்ணப்பத்தினை இருநகல்களாக அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும். மேலும் விவரங்கள் பெற, பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, காக்களுர் தபால் நிலையம் அருகில், திருவள்ளுர் மாவட்டம் – 602003 என்ற முகவரியை அணுகுமாறு திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *