வேலூர்முன்னாள் சிறைவாசிகளுக்கு இரண்டு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள் .

Loading

வேலூர் ஜூன்26

ஆப்கா இயக்குநர் எம்.சந்திரசேகர் வழங்கினார்.

வேலூரில் சிறையில் நன்னடத்தையுடன் இருந்த காரணத்தினால் அவர்கள் திருந்தி சமூகத்தில் நல்லொழுக்கத்துடன் வாழ்ந்திட ஏதுவாக தமிழக அரசால் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு முன் விடுதலையான 16 முன்னாள் சிறைவாசிகளுக்கு அவர்களின் வாழ்பாதாரத்தை மேம்படுத்திட ஏதுவாக அவர்களுக்கு 2 மாதங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஆப்கா இயக்குநர் எம்.சந்திரசேகர் அவர்களால் வழங்கப்பட்டது.
இதற்கான நிகழ்வு தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் காவலர் திருமண மண்டபம் அருகில் அமைந்துள்ள தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்க (TAMILNADU DISCHARGED PRISONERS AID SOCIETY-DPAS) அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்விற்கு சங்கத்தின் துணைத்தலைவரும் மூத்த வழக்கறிஞரும், ஆப்காவின் கௌரவ விரிவுரையாளருமான டி.எம்.விஜயராகவலு தலைமை தாங்கினார். செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார். மேலும் நிகழ்வு பற்றிய விளக்க உரையாற்றினார்.
வேலூர் தொரப்பாடி சிறைத்துறை அலுவலர்களுக்கான பயிற்சி மையத்தின் இயக்குநர் திரு.எம்.சந்திரசேகரன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முன் விடுதலையான கரோனா நோய் தடுப்பு காரணமாக வாழ்வாதாரத்தினை இழந்துள்ள முன்னாள் சிறைவாசிகள் 16 பேருக்கு ஒரு குடும்பத்திற்கு இரண்டு மாதங்களுக்கு தேவையான மளிகை பொருட்கள்
25கிலோ அரிசி சிப்பம், துவரம் பருப்பு, கடலை பருப்பு, கடுகு, மிளகு, சீரகம், வெந்தியம், மஞ்சள் தூள், தணியா தூள், தேயிலை, காபித்தூள், துணி சோப்பு, குளியல் சோப்பு, பற்பசை, பிரஷ், புளி, ரவை, கோதுமை மாவு, உப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் தலா ஒருவருக்கு ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மதிப்பீட்டில் வழங்கினர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *