கொரோனாவால் கணவனை இழந்த சோகம் தாங்காமல் இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலை

Loading

ஈரோடு ஜூன் 25
கொரோனா நோய்தொற்று காரணமாக கணவனை இழந்த இளம் பெண் தன் இரு குழந்தைகளுக்கும் விஷம் மாத்திரை கொடுத்து தானும் உட்கொண்டு தற்கொலை

ஈரோடு திண்டல் லட்சுமி கார்டனை சேர்ந்த பார்த்தசாரதி மகள் நித்தியா 37 இவரின் கணவர் பாஸ்கர், நீல்கிரிஸ் சீனியர் மேலாளர் , இவர் சென்னை மாங்காட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார் ,மகள் மகதி 11 ,மகன் யாதவ் கிருஷ்ணன் 6; கொரோனா பாதிப்பில் கடந்த மே 9-ஆம் தேதி பாஸ்கர் உயிரிழந்தார் இதனால் பெற்றோர் வீட்டுககு குழந்தைகளுடன் வந்த நித்தியா கடும் மன வேதனையில் இருந்துள்ளார் எனத் தெரிகிறது. இந்நிலையில் ,நேற்று மதியம் குழந்தைகளுடன் நித்தியா படுக்கை அறைக்கு சென்று கதவை தாளிட்டுக் கொண்டார் சிறிது நேரம் கழித்து சந்தேகமடைந்த பார்த்தசாரதி கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது மகள் ,பேரன் ,பேத்தி மயங்கிய நிலையில் கிடந்தனர் உடனடியாக அவர்களை ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார் குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டு நித்தியாவும் சல்ஃபாஸ் மாத்திரை உட்கொண்டது தெரியவந்தது இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மூவரும் அடுத்தடுத்து இறந்ததால் இந்த சம்பவம் அப்பகுதியில் பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கொரோனா தொற்று காரணமாக குடும்பமே பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *