பெண்களின் நலனுக்காக பணியாற்றிய சமூக பணியாளர் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு விருது : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

Loading

திருவள்ளூர் ஜூன் 24 : தமிழக அரசின் சுதந்திர தின விழா விருதுக்கு சிறந்த சமூக பணியாளர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு விருது வழங்கப்பட உள்ளது. இவ்விருதினை பெற பெண்களின் நலனுக்காக பணியாற்றிய சிறந்த சமூக பணியாளர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனத்திடமிருந்து விண்ணப்பங்கள் உரிய சான்றுகளுடன் 27.06.2021 மாலை 5 மணிக்குள் திருவள்ளுர் மாவட்ட சமூகநல அலுவலரைத் தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

விருது பெறுவதற்கு தமிழ்நாட்டை (திருவள்ளுர் மாவட்டம்) பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மகளிர் நலனுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் சமூக சேவை நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சமூக சேவை நிறுவனம் அரசு அங்கிகாரம் பெற்ற நிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.விண்ணப்பதாரர் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்த விவரம் 1 பக்க அளவில் தமிழ் (வானவில் அவ்வையார்) மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து அளிக்கவும்.விண்ணப்பதாரரின் கருத்துரு – 4, (தமிழ்-2, ஆங்கிலம் – 2) மற்றும் பாஸ் போட்டோ ஆகியவைகளுடன் விண்ணப்பிக்க வேண்டும், உரியமுறையில் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 2 வது தளம், திருவள்ளுர் மாவட்டம், அலுவலக தொலைப்பேசி – 044-29896049 என்ற அலுவலக முகவரியை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *