கல்பனா சாவ்லா விருதிற்கு விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
![]()
திருவள்ளூர் ஜூன் 24 : கல்பனா சாவ்லா விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று, வீரதீர செயலுக்காக, தமிழ்நாட்டைச் சார்ந்த ஒரு பெண்மணிக்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த தனித்தன்மையுடன் கூடிய வீரமான, தைரியமிக்க, எதையும் எதிர் கொள்ளக் கூடிய ஆற்றல் மிக்க ஒரு பெண்மணிக்கு சிக்கலான தருணங்களில் சாதுர்யமாக செயல்பட்டு உயிர்காத்த அவரது ஆற்றல்மிக்க நடவடிக்கைக்காக கல்பனா சாவ்லா விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் 2021-ம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது.இதற்கு என்று தனி விண்ணப்பம் கிடையாது. விருதுகளுக்கான விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இணையதளத்தின் முகவரி www.sdat.tn.gov.in ஆகும்.
தகுதியான விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், ஒருங்கிணைந்த மாவட்ட விளையாட்டரங்கம், திருவள்ளுர் அவர்களது அலுவலகத்தில் 27.06.2021 அன்று மாலை 5 மணிக்குள்; சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களை அலுவலக நேரங்களில் தொலைபேசி எண்ணில் (7401703482) தொடர்பு கொள்ளலாம் என திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
