பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்துஇந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் பல்லாவரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

Loading

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து செங்கல்பட்டு மாவட்டம் சென்னை பல்லாவரம் பேருந்து நிலையம் அருகில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஆலந்தூர் பகுதி செயலாளர் ராஜாமணி தலைமையில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை சுட்டிக்காட்டும் வகையில் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பல்லாவரம் பகுதி தலைவர் சிந்தன் முன்னிலை வகித்தார். தாம்பரம் பகுதி தலைவர் காண்டீபன் கண்டன உரையாற்றினார்.இதில் இயக்கத்தின் நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply