ஆவடியில் இணையதளம் மற்றும் இ-சேவை மையத்தின் வருவாய் தீர்வாய மனுக்கள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு
திருவள்ளூர் ஜூன் 20 : திருவள்ளுர் மாவட்டம், ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக இணையதளம் மற்றும் இ-சேவை மையம் வாயிலாக பெறப்பட்ட வருவாய் தீர்வாய மனுக்கள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் மனுக்களுக்கு உரிய தீர்வு காண சம்பந்தப்பட்ட வருவாய் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இவ்வாய்வின்போது ஆவடி வட்டத்தில் வருவாய் துறையைச் சேர்ந்த வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோரிடம் இணையதளம் வாயிலாக பெறப்பட்ட வருவாய் தீர்வாய மனுக்களை விரைவாக பரிசீலித்து உரிய தீர்வு காண வேண்டும் எனவும், நிலுவையில் உள்ள அனைத்து கணக்குகளையும் முடித்து ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதில் உதவி ஆட்சியர் (பயிற்சி) அனாமிகா ரமேஷ், ஆவடி வட்டாட்சியர் செல்வம், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் மணிகண்டன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.