பேரணாம்பட்டு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஏழை மக்களுக்கு இலவச அரிசி
வேலூர் ஜூன் 19
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர், இளந்தலைவர் ராகுல்காந்தி அவர்களின் 51 வது பிறந்தநாளை “உழைக்கும் மக்கள் பாதுகாப்பு தினமாக”அனுசரித்து வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொதுமக்கள் 100 பேருக்கு தலா 10 கிலோ அரிசி, முககவசங்கள் மற்றும் கிருமி நாசினி ஆகியவை வழங்கப்பட்டன. நிகழ்விற்கு வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சுரேஷ்குமார் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். ஒன்றிய காங்கிரஸ் பொறுப்பாளர் செல்வக்குமார், மாவட்ட துணைத் தலைவர் பாஸ்கரன், மாவட்ட எஸ்ஸி துறை பொறுப்பாளர் காளியப்பன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் விஜய் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் திருமதி.கிருஷ்ணவேணி வரவேற்புரை ஆற்றினார். நிகழ்வில் சமூக ஆர்வலர் நாட்டாம்கார் அக்பர் சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்வில் நகர, ஒன்றிய நிர்வாகிகள் ராஜேந்திரன், கன்னியப்பன், உவைஸ் அஹ்மத், கோவிந்தசாமி, மோகன், செல்வராஜ், கோவிந்தராஜ், சேகர், கமலக்கண்ணன், தினேஷ், ஏகநாதன், முனுசாமி, சுகன்யா, முருகேசன், கோவிந்தராஜ், மாச்சம்பட்டு முனுசாமி, காந்தராஜ், ஜலந்தர், கிண்ணி மணி, கஜேந்திரன், ஜாகீர் உசேன், சமியுல்லா, மகாலட்சுமி, சிவகாமி, சோனிநாயக், சுப்பிரமணி, மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி சமூக ஊடக பிரிவு தலைவர் ஆ. நவீன்குமார் நன்றியுரை கூறினார்.