திருவள்ளூரில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான வசதி மையம் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார்
![]()
திருவள்ளூர் ஜூன் 18 : திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திடடங்கள் முறையாக சென்று சேர்கிறதா என்று ஆய்வு மேற்கொள்ளவும், பொது மக்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் ஏதுவாக மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு அலுவலக திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

அப்பொழுது மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான வசதி மையத்தை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர்.ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் திறந்து வைத்து சிறப்புரையாற்றினர்.
இந்த குழுவின் தலைவராக திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கே.ஜெயக்குமாரும், அதன் உறுப்பினர்களாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் மற்ரும் சட்டமன்ற உறுப்பினர்கள் திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன், பூவிருந்தவல்லி கிருஷ்ணசாமி, திருத்தணி சந்திரன், கும்மிடிப்பூண்டி டி.ஜே.எஸ். கோவிந்தராஜன், பொன்னேரி திரு.துரை சந்திரசேகர்,உள்ள்டட சட்டமன்ற உறுப்பினர்கள் இதன் உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பொன்னையா பணியிட மாற்றம் செய்ததால் புதிய ஆட்சியராக ஆல்பி ஜான் வர்க்கீஸ் தேர்வு செய்யப்பட்டதாகவும் சென்னை மாநகராட்சியில் துணை ஆட்சியராக பதவி வகித்த போதே குப்பைக் கழிவுகளை மறு சுழற்சி மூலம் எப்படி அதை பிரித்தாள்வது என்பது குறித்து பணிகளை சிறப்பாக மேற்கொண்டதாகவும், இதற்காக சிறப்பு விருது பெற்றிருப்பவர் தான் நமது மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
இதில் திருவள்ளுர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஜே.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி),ஆ.கிருஷ்ணசாமி(பூவிருந்தவல்லி), வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளுர்), க.கணபதி (மதுரவாயல்), ச.சந்திரன் (திருத்தணி), துரை சந்திரசேகர் (பொன்னேரி), மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் கே.வி.ஜி.உமா மகேஷ்வரி, துணைத் தலைவர் தேசிங்கு, திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.லோகநாயகி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்
