மாண்புமிகு அமைச்சா்கள் மீனாட்சி அம்மன் கோயில் யாணையினை பாா்வையிட்ட புகைப்படம்
![]()
அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில் யானை பார்வதிக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் சிகிச்சை குறித்து மருத்துவ குழுவினர்களிடம் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் .பி.மூர்த்தி அவர்கள் , மாண்புமிகு இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் , மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர்.பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் ஆகியோர் இன்று ( 18-6-2021 ) கேட்டறிந்தனர் .

இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் அவர்கள் , மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் , அவர்கள் , மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன் அவர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி ( மதுரை வடக்கு) ஆ.வெங்கடேசன் ( சோழவந்தான் ) , மு.பூமிநாதன் ( மதுரை தெற்கு ) , ஆகியோர் உடன் உள்ளனர்
