முன்களப்பணியாளர்களான பத்திரிக்கையாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கிய பாஸ்டர் ஐசக் டேனியல்
குரோம்பேட்டை: தற்போது உலகமுழுவதும் கொரோனா தொற்று அதிவேக பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில் அனைவரும் எதிர்கொண்டிருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் பல்வேறு தரப்பு மக்கள் வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர்.
சென்னையின் பல பகுதிகளில் வீடற்ற சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோர் உண்ண உணவின்றி தவித்து வரும் வேளையில் பல்வேறு தன்னார்வலர்கள் உணவு வழங்கி வருகின்றனர்.
குரோம்பேட்டையில் உள்ள நியூ லைஃப் ஜெம்ஸ் என்ற அமைப்பின் சார்பில் கிறிஸ்தவ மத போதகரும், பெந்தேகொஸ்தே சபையின் ஒருங்கிணைப்பாளருமான ஐசக் டேனியல் என்பவர் குரோம்பேட்டை,உத்திரமேரூர், செங்கல்பட்டு, வட சென்னை, மத்திய சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடற்ற சாலையோர ஆதரவற்ற மக்கள் ,சுகாதார பணியாளர்கள், ஆட்டோ ஒட்டுநர்கள்
திருநங்கைகள், சிறுவர் சீர்திருத்தப் பள்ளி சிறார்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். மேலும் 4 கிராமங்களை தத்தெடுத்து தேவையான உதவி களையும் செய்து வருகிறார் .
அதோடு மட்டுமில்லாமல் சிறு தேவாலயங்களில் இருப்போருக்கு சிறு உதவிகளையும் செய்து வருகிறார்…
இதன் ஒரு பகுதியாக கொரோனா தொற்று பரவல் சங்கிலியை உடைப்பதற்கு முன் களப்பணியாளர்களான பத்திரிக்கையாளர்களுக்கு மனம்முருகி ஜெபித்து நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை, குரோம்பேட்டையிலுள்ள ஹவுஸ் ஆஃப் ப்ரேயர் ஆலயத்தில் நடைப்பெற்றது..
இந்நிகழ்வில் பத்திரிக்கை மற்றும் மின்னிதழ் செய்தியாளர்களுக்கு நிவாரணமாக அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு, உணவு மற்றும் குடிநீர் பாட்டில் வழங்கபட்டது