மாற்றம் ஏற்படுத்திய வெற்றிகரமான திட்டம் -அமிதாப் காந்த்

Loading

மாற்றம் ஏற்படுத்திய வெற்றிகரமான திட்டம்

-அமிதாப் காந்த்

நல்ல உணவு மக்களையும், நாடுகளையும் ஒருங்கிணைப்பதில்ஒருபோதும் தவறுவதில்லை. கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் ஒருசிறிய மாவட்டமான சந்தவ்லியில் விளைவிக்கப்பட்ட கருப்பு அரிசி,கடந்த குளிர்காலத்தில் ஓமன், கத்தார் நாடுகளின் உணவில்முக்கியஇடத்தைப்பிடித்தது. 112 முன்னேற்றத்துக்கு இலக்கானமாவட்டங்களில் ஒன்றான சந்தவ்லி, பூர்வாஞ்சலின்
நெற்களஞ்சியமாகத் திகழ்கிறது. நெல் சாகுபடிக்குப் பெயர் பெற்றஅந்தப் பகுதியில், மாவட்ட நிர்வாகம் பல்வேறு வகையானவிளைபொருட்களைப் பயிரிட உற்சாகம் அளித்ததன் பயனாக,
விவசாயிகள் உரமிடாமல் கருப்பு அரிசியை விளைவித்தனர். இந்தப்பரிசோதனைக்கு சிறப்பான வெற்றி கிடைத்ததன் பயனாக, கருப்புஅரிசி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் உள்பட உலகச்சந்தையில் இடம் பிடித்தது.

முன்னேற்றத்துக்கு இலக்கான மாவட்டங்கள் திட்டம் இந்தியாவின்வளர்ச்சிக்கான சவால்களை அதிகம் கொண்டுள்ள 112மாவட்டங்களை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, வேளாண்மை, நீர் ஆதாரங்கள்,அடிப்படை கட்டமைப்பு, நிதி உள்ளடக்குதல், திறன் மேம்பாடு ஆகியதுறைகளில் மேம்பாடு அளிக்கும் வகையில், 2018-ம் ஆண்டு ஜனவரிமாதம் பிரதமரால் தொடங்கப்பட்டது. மாநில அரசுகள் மற்றும்
மாவட்ட நிர்வாகங்களுடன் மத்திய அளவில் நிதி ஆயோக் இதற்குவழிகாட்டி வருகிறது. இந்த மாவட்டங்களில் பெரும்பாலானவைநாட்டின் தொலைதூரப் பகுதிகளில் அமைந்துள்ளன. நாகாலாந்துமாநிலத்தின் கிப்பிரே, மணிப்பூரின் சான்டெல், பீகாரின் ஜமுய்,
ராஜஸ்தானின் சிரோகி ஆகிய மாவட்டங்கள் சவால்களை
எதிர்கொள்வதில் தொடர்ந்து செயல்பட்டு, புதிய வரலாறு படைத்துவருகின்றன.

‘ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு, போட்டி’ ஆகிய மூன்று தூண்களின்
அடிப்படையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, வளர்ச்சியின்
சின்னமாக மாறியுள்ளது. இந்தியாவின் மக்கள் தொகையில் 14
சதவீதத்தைக் கொண்ட 27 மாநிலங்களில் இது மக்கள் இயக்கமாக
மாறியுள்ளது. சந்தவ்லியின் கருப்பு அரிசி பரிசோதனை போல, பல
சிறந்த நடைமுறைகள், வெற்றிக் கதைகள் இத்திட்டத்தின் மூலம்,
இந்த மாவட்டங்களில் உலா வருகின்றன.
இத்திட்டத்தின் சிறப்பான செயல்பாடு தேசிய அளவிலும், சர்வதேச
அளவிலும் பரவலான பாராட்டுக்களைப் பெற்றுத் தந்துள்ளது. 2021
ஜூன் மாதம், இந்தியாவில் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம்
(யுஎன்டிபி), இத்திட்டம் தொடர்பான தனிப்பட்ட மதிப்பீட்டு
அறிக்கையை வெளியிட்டுள்ளது. `முன்னேற விரும்பும்
மாவட்டங்கள்: ஒரு மதிப்பீடு’ என்ற தலைப்பில் வெளியான
அறிக்கை, நீடித்த வளர்ச்சி இலக்குகளை உள்ளூர் அளவில்
உறுதிப்படுத்துவதை இத்திட்டம் நனவாக்கியுள்ளதாக
தெரிவித்துள்ளது. இத்திட்டம் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், உலக
அளவில் செயல்படுத்தப்பட வேண்டிய முன்மாதிரி திட்டம் என அது
புகழ்ந்துரைத்துள்ளது. இத்திட்டத்தின் வெற்றிக்கு சர்வதேச பாராட்டு
கிடைப்பது இது முதன்முறையல்ல. 2020 செப்டம்பரிலும்
இன்ஸ்டிடியூட் ஆப் காம்பெடிடிவ்னஸ் வெளியிட்ட அறிக்கையிலும்
இத்திட்டம் பாராட்டு பெற்றுள்ளது. மேலும், உலக அளவிலான
நிபுணர்களும் இத்திட்டத்தைப் பாராட்டியுள்ளனர். இத்திட்டத்தைப்
பின்பற்றி, ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுமக்களுடன் இணைந்து
வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற யோசனை
தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூஎன்டிபி மதிப்பீடு, தரமான மற்றும் அளவில் பெரிய
ஆராய்ச்சிக்கான வலுவான முறைகளைப் பின்பற்ற விழைகிறது.

இதற்கான ஆராய்ச்சியின் சாரமாக, மாவட்ட ஆட்சியர்கள்,
சம்பந்தப்பட்ட அனைத்து பிரிவினருடன் கள நேர்காணல்கள்
நடத்தப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களுக்கு வெளியில், சில
மாவட்ட ஆட்சியர்களின் பேட்டிகளும் எடுக்கப்பட்டு, அவை ஒப்பீட்டு
அளவில், பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தில்
அடிமட்டத்தில் இணைந்து செயல்படுபவர்களில் பெரும்பாலானோர்
இளைஞர்கள் ஆவர். அவர்களது ஒருங்கிணைப்பும், ஒத்துழைப்பும்
இத்திட்டம் சிறப்பாக செயல்படுவதற்கு முக்கிய காரணிகளாகும்.
திட்டத்தின் செயல்பாட்டுக்கான அனைத்து 49 குறியீடுகளும்
மதிப்பிடப்பட்டு, சிறப்பாக செயல்படும் மாவட்டங்களின் தரவரிசை
மாதந்தோறும் வெளியிடப்படுகிறது. இதன் மூலம், மாவட்டங்களுக்கு
இடையே ஆரோக்கியமான போட்டி உருவாக்கப்படுகிறது. மற்ற
மாவட்டங்களும் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்த வாய்ப்பு
ஏற்படுகிறது.

முன்னேற வாய்ப்புள்ள மாவட்டங்கள் திட்டம் வளர்ச்சியை
ஊக்குவிப்பதற்கு உகந்த சூழலை உருவாக்க ஒரு கருவியாக
செயல்படுகிறது. கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளை
அடையாளம் காணவும் இது உதவுகிறது.

முதலாவதாக, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றை
மேம்படுத்த பெண்கள் மற்றும் குழந்தைகள் பயனுறும் வகையில்
மாதிரி அங்கன்வாடி மையங்கள் மாவட்டம்தோறும்
ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, குழந்தைகளிடம்
காணப்பட்ட தீவிர ஊட்டச்சத்து குறைபாடுகள் விகிதம்
பெருமளவுக்கு குறைந்துள்ளது. குழந்தைகளின் உயரம் மற்றும்
எடையைக் கணக்கிடுவதற்கான முறைகள் தற்போது
தரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த விஷயத்தில் ஜார்க்கண்டின் ராஞ்சி
மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. அங்கு
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள `போஷன்’ செயலி மூலம் தரவுகள்
பெறப்பட்டு மதிப்பிடப்படுகின்றன.

இரண்டாவதாக, இந்த மாவட்டங்களில் கல்வியில் பெரும்
முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. கல்வி முறையில் புகுத்தப்பட்ட
புதுமை மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் மாற்றத்தை
ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தின் தொலைதூர
மாவட்டமான நம்சையில் பின்பற்றப்பட்ட ‘ ஹூமாரா வித்யாலயா’
சிறப்பிடம் பெற்றுள்ளது. இந்த முறையின் மூலம், ஒவ்வொரு
பள்ளியிலும், செயல்பாடுகளைக் கண்காணிக்க ஒரு பிரதிநிதி
நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ‘யதாசர்வம்’ என்னும் ஆன்லைன்
தளமும் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடைமுறைகள்
காரணமாக, கற்றல் மற்றும் கற்பித்தலில் நம்சை சிறப்பான
இடத்தைப் பதிவு செய்துள்ளது.

மூன்றாவதாக, சந்தவ்லி அரிசி பரிசோதனை. இத்திட்டத்தின் மூலம்,
வேளாண்மை மற்றும் நீர் ஆதாரங்கள் முக்கிய இடத்தைப்
பிடித்துள்ளன. பாசன வசதிகளை மேம்படுத்தி, விவசாயிகளுக்கு
கற்பித்து, விளைச்சலைப் பெருக்க நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் விளையும் பொருட்களை
சந்தைப்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்கவும் முக்கியத்துவம்
அளிக்கப்படுகிறது. கோல்மார்ட் என்னும் இ-காமர்ஸ் போர்ட்டல்
உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தேசிய அளவிலும், உலகச்
சந்தைகளிலும் உள்ளூர் பொருட்களை கொண்டு செல்ல வழி
ஏற்படுகிறது.
நான்காவதாக, இந்த மாவட்டங்களில் தொடர்புகளை, இணைப்புகளை
ஏற்படுத்தும் உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் உள்நாட்டு
பாதுகாப்பை உறுதி செய்ய இந்த அளவுகோலை
பயன்படுத்துகின்றன. உதாரணமாக, சத்திஷ்கரின் பிஜப்பூர்,
ஒடிசாவின் மல்கான்கிரி ஆகியவை உள்கட்டமைப்பு துறையில்
பெரும் முன்னேற்றம் கண்டுள்ளன.

ஐந்தாவதாக, நிதி உள்ளடக்குதல் மற்றும் திறன் மேம்பாடு
ஆகியவற்றுக்கு மகாராஷ்டிராவின் கட்சிரோலி அருமையான
முன்மாதிரியாக திகழ்கிறது. இந்த மாவட்டத்தில் குறு-ஏடிஎம்கள்
தொடங்கப்பட்டு, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நிதியுதவி
கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.

முன்னேற வாய்ப்புள்ள மாவட்டங்கள் திட்டத்தின் மகத்தான வெற்றி,
தேசிய, மாநில, மாவட்ட நிர்வாகங்களின் முயற்சிகளின் சான்றாக
அமைந்துள்ளது. நமது பிரதமரின் தொலைநோக்கு பார்வையே
இதற்குக் காரணமாகும். இந்த மாவட்டங்களின் மாற்றம் ஏற்படுத்திய
வெற்றி கதைகள் பல்வேறு பிரிவினரின் ஒத்துழைப்பு இல்லாமல்
சாத்தியமாகி இராது. இந்தியாவின் வளர்ச்சி தொடர இத்திட்டம்
பெருமளவுக்கு பங்களித்துள்ளது.

 கட்டுரையாளர் நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி.
கட்டுரையில் குறிப்பிட்டுள்ளவை அவரது சொந்த கருத்துக்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *