திருவள்ளூர் மாவட்ட புதிய ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ் பொறுப்பேற்றார்
திருவள்ளூர் ஜூன் 16 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்து வந்த பொன்னையா தற்போது நகராட்சி நிர்வாக இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைதொடர்ந்து சென்னை சுகாதார துணை ஆணையராக பொறுப்பு வகித்து வந்த ஆல்பி ஜான் வர்கீஸ் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரா நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதைதொடர்ந்து நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் புதிதாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் அவர்களின் பொறுப்பு மற்றும் பணிகள் குறித்து சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
இதைத்தொடர்ந்து நேற்று காலை 6.45 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 22-வது மாவட்ட ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ், கையெழுத்திட்டு பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
இவர் கடந்த 2013 ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் படிப்பை முடித்து முதல் முறையாக தேவக்கோட்டையில் துணை ஆட்சியராக பணியில் சேர்ந்தார்.2013 ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் ஆன இவர் முதன் முறையாக மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட ஆல்பி ஜான் வர்கீஸ்க்கு, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துச்சாமி. ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வித்தியா ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.