காட்பாடி ரெட்கிராஸ், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து உலக இரத்த தானம் தின விழா .

Loading

வேலூர் மாவட்டம் காட்பாடியில் இரத்த தானம் செய்த 16பேருக்கு விருது வழங்கி பாராட்டு
உலக சுகாதார நிறுவனம் இரத்த தானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக உலக இரத்த வழங்குநர் நாளாக கொண்டாடிவருகிறது. 2005 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள், எ.பி.ஓ இரத்த குழு அமைப்பை கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றவரான கார்ல் லாண்ட்ஸ்டெய்னெரின் பிறந்த நாள் ஆகும்காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் காட்பாடி ஒன்றிய கிளை இணைந்து உலக இரத்த தானம் செய்தோர் தினத்தினை முன்னிட்டு இரத்த தானம் செய்த இரத்த கொடையாளர்களுக்கு சிறந்த இரத்த தானம் செய்தோர் விருது வழங்கி கௌரவித்தது.இதற்கான விழா காட்பாடி காந்திநகர் திருமகள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆர்.சீனிவாசன் வரவேற்று பேசினார்.காட்பாடி வட்ட துணை வட்டாட்சியர் டி.முரளிதரன், மருத்துவர் குழு தலைவர் வீ.தீனபந்து, துணைத்தலைவர் ஆர்.விஜயகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உறுதிமொழி ஏற்றல்
பொருளாளர் வி.பழனி ரத்த்தான உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
விருது வழங்கி பாராட்டு
இரத்த தானம் செய்த 16 கொடையாளர்களுக்கு காட்பாடி வட்டாட்சியர் ஆர்.பாலமுருகன் சால்வை அணிவித்து விருது வழங்கி கௌரவித்தார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *