விருகம்பாக்கம் பகுதியில் குடிபோதையில் தகராறு செய்து கத்தியால் தாக்கிய நபர் கைது.
சென்னை, விருகம்பாக்கம், இந்திரா நகர் 3வது குறுக்கு தெரு, எண்.2/17
என்ற முகவரியில் வசித்து வரும் மணிகண்டன், வ/37, த/பெ.சந்தானம் என்பவர்
வாட்டர் கேன் சப்ளை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில்,
மணிகண்டன் நேற்று (14.6.2021) இரவு சுமார் 10.00 மணியளவில் வீட்டு வாசலில்
நின்றிருந்தபோது, எதிர் வீட்டில் வசிக்கும் முத்து என்பவர் குடிபோதையில்
அவ்வழியே செல்வோரிடம் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது
மணிகண்டன் தகராறு செய்யும் முத்துவை தட்டி கேட்டபோது, ஆத்திரத்தில் முத்து
காய்கறி வெட்டும் கத்தியால் மணிகண்டனின் மார்பில் குத்தியதில் இரத்தக்
காயமடைந்தார். மணிகண்டனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம்
வசிப்பவர்கள் முத்துவை மடக்கிப் பிடித்து காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல்
கொடுத்து, R-5 விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மேலும், படுகாயமடைந்த மணிகண்டனை மீட்டு, மருத்துவமனையில்
சேர்த்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், இச்சம்பவம் குறித்து மணிகண்டன் R-5
விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு
செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
R-5 விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர்
விசாரணை செய்ததில், முத்து குடிபோதையில் தகராறு செய்து மணிகண்டனை
கத்தியால் தாக்கியது தெரியவந்தது. அதன்பேரில், எதிரி முத்து, வ/20,
த/பெ.ராபர்ட், எண்.23, இந்திராநகர் 3வது குறுக்கு தெரு, விருகம்பாக்கம்,
சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கத்தி பறிமுதல்
செய்யப்பட்டது.
விசாரணைக்குப் பின்னர் எதிரி முத்து இன்று (15.6.2021) நீதிமன்றத்தில்
ஆஜர் செய்யப்பட உள்ளார்.