Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன்

Loading

Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன் – செவ்வாய்க்கிழமை ஜூன் 15, 2021 சென்னை:

பிலவ வருடம் ஆனி 1 ஆம் தேதி ஜூன் 15,2021 செவ்வாய்க்கிழமை. பஞ்சமி திதி இரவு 10.57 மணிவரை அதன் பின் சஷ்டி திதி. ஆயில்யம் இரவு 09.42 மணிவரை அதன் பின் மகம். சந்திரன் இன்றைய தினம் கடக ராசியில் பயணம் செய்கிறார். தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

மேஷம்
ராசிக்கு சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சந்திரன் செவ்வாய் உடன் இணைந்து பயணம் செய்கிறார். சந்திர மங்கல யோகம் கூடி வந்துள்ளது. உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தாயாருடன் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். எதிர்பாராத செலவுகள் வந்தாலும் சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

ரிஷபம்
சந்திரன் மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் கூடியுள்ளார். கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்களால் பயனடைவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உறவினர்கள் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள்.

மிதுனம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனப்போர் நீங்கும் மகிழ்ச்சி அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் எளிதாக முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே பிரச்சினைகள் வரும் விட்டுக்கொடுத்து செல்லவும். திருமணப்பொருத்தம் – மகிழ்ச்சியான மண வாழ்க்கை, பிரிந்த தம்பதியர் ஒன்று சேர என்ன பரிகாரம்

கடகம்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வின்றி உழைக்க வேண்டி வரும். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் இதுநாள் வரை இருந்த மறைமுக நெருக்கடிகள் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.

சிம்மம்
சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். வாகனம் மூலம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிவோடும் துணிவோடும் செயல்படுவீர்கள்.

கன்னி
சந்திரன் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உறவினர்கள் நண்பர்களால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

துலாம்
சந்திரன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். நெருங்கியவர்கள் மூலம் உதவிகள் தேடி வரும்.

விருச்சிகம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அலுவலகத்தில் கடினமாக வேலைகளை எளிதில் முடிப்பீர்கள். தொழிலில் லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்டம் தேடி வரும். இன்றைய தினம் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு
சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிக்கப் பாருங்கள். சக ஊழியர்களால் சிக்கல்கள் வரலாம் கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டிய நாளாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் மறைமுக பிரச்னைகள் வரும். வீட்டிலும் வெளியிலும் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

மகரம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் புதிதாக வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும் . உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள் . தன்னம்பிக்கை அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும்.

கும்பம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. திடீர் யோகம் தேடி வரும். வியாபாரத்தில் சரக்குகள் விற்று தீரும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். சில புதுமைகளை செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

மீனம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அனாவசிய செலவுகளை தவிர்க்கவும். நட்பால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகம் கிடைக்கும். வாங்கி வைத்த சரக்குகள் விற்றுத்தீரும். முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டமான நாளாக அமைந்துள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *