மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு
உண்மையாக உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும், பத்திரிகையாளர் சங்கங்களை முறைப்படுத்த வேண்டும் என அனைத்து பத்திரிகையாளர்களின் கோரிக்கை.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள் பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர் சங்கங்களை அழைத்து தனித்தனியே ஆலோசனை நடத்தினார். இதில் 8 சங்கங்களுக்கு மட்டுமே(சங்கம் அல்லாத அமைப்பு உட்பட) அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த சங்கங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு புதுப்பித்து இருக்கிறார்களா என்று ஆராயாமல் அவருடைய பதிவு சான்றிதழ் கேட்டு பெறாமலும் அவர்களை அழைத்து கூட்டம் நடத்தியது பத்திரிகையாளர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது எந்த அடிப்படையில் அவர்களை அழைத்தார்கள் என்பதை அரசு விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்.
அதிகாரிகள் மீண்டும் மீண்டும் தவறு செய்வதால் சிக்கல்கள் தான் உருவாகுமே தவிர நிரந்தர தீர்வு கிடைக்காது என்பது
உண்மை.
செய்தித்துறை அதிகாரிகளின் தவறான,நடவடிக்கைகள் இன்னும் சுயநலபோக்கில் தொடர்கிறது.
இதை தற்போதைய அமைச்சர் கூர்ந்து கவனித்து தவறு செய்பவர்களை “களை” எடுக்கவேண்டும். பத்திரிகையாளர்கள் நலன் காக்கப்பட வேண்டும்.
இதுவே பத்திரிகையாளர்களின்
கோரிக்கையாகும்.
மேலும் களப்பணியில் நேரடியாக பணியாற்றும் உறுப்பினர்களின் சங்கத்தினரை அழைக்காமல் பத்திரிக்கையாளர் அல்லாத அமைப்புகளையும் அழைத்து பேசுவது தீர்வாகாது ஆகவே அனைத்து சங்கங்களையும் அழைத்து பேசவேண்டும் என்பது பத்திரிகையாளர்களின் கோரிக்கையாக உள்ளது .
அரசு நடைமுறைப்படுத்துமா? செய்தித்துறை அமைச்சர் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வாரா ? இப்படி இன்னும் பல கேள்விகள் பத்திரிகையாளர் மத்தியில் எழுந்துள்ளது ஆகவே இதுபோன்ற குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் &வெளியீட்டாளர் சங்கத்தின் நியாயமான கோரிக்கையாகும்.