Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன்

Loading

Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன் திங்கட்க்கிழமை ஜூன் 14, 2021சென்னை:

பிலவ வருடம் வைகாசி 31 ஆம் தேதி ஜூன் 14,2021 திங்கட்க்கிழமை. சதுர்த்தி திதி இரவு 10.34 மணிவரை அதன் பின் பஞ்சமி திதி. பூசம் இரவு 08.36 மணிவரை அதன் பின் ஆயில்யம். சந்திரன் இன்றைய தினம் கடக ராசியில் பயணம் செய்கிறார். தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் இன்றைய தினம் நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறைவு ஏற்படும். வியாபாரத்தில் உள்ள நெருக்கடிகளை சமாளிக்க நீங்கள் பொறுப்புடனும், சிக்கனத்துடனும் நடந்து கொள்வது அவசியம். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். இன்று உங்களுக்கு தாராள தன வரவும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.

மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். வருமானம் பெருகும். வங்கியில் சேமிப்பு உயரும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை ஏற்படும். திடீர் என்று நல்ல செய்தி வரும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். திருமணப்பொருத்தம் – மகிழ்ச்சியான மண வாழ்க்கை, பிரிந்த தம்பதியர் ஒன்று சேர என்ன பரிகாரம்

கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு கூட்டாளிகளின் உதவியும் ஒத்துழைப்பும் கிட்டும். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பாராத இனிய நிகழ்வு நடைபெறும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் ஏற்படும். வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் விற்பனை செய்வதன் மூலம் லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீண் விரைய செலவுகளைத் தவிர்க்கவும்.

கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி வரும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வேலை விசயமாக சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளுக்கு லாபம் கிடைக்கும்.

துலாம் சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு 10ஆம் வீட்டில் பயணம் செய்வதால் வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகம் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் தேடி வரும்.

விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். உத்தியோக ரீதியான பிரச்சினைகள் ஓரளவு குறையும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் அனுகூலம் உண்டாகும்.

தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளது. தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடவும். இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வீண் பேச்சை குறைப்பது நல்லது.

மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் ரீதியான பயணங்களால் நற்பலன்கள் உண்டாகும். பிள்ளைகளால் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியைக் கொடுக்கும்.

கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம செய்கிறார். இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பழைய கடன்கள் வசூலாகும். பண வருமானம் அதிகரிக்கும்.

மீனம்
சந்திரன் இன்றைய தினம் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வரும். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனகஷ்டங்கள் நுங்கி நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் விற்பனையில் லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *