ஸ்ரீ சிவசக்தி தர்ம அறக்கட்டளை சார்பாக பெரம்பை கிராமத்தில் கொரோனா நிவாரண பொருட்களாக மளிகைப் பொருட்கள் மற்றும் காலை சிற்றுண்டி மரக்கன்றுகள் வழங்கப்பட்டன
புதுவை மாநிலம், ஸ்ரீ சிவசக்தி தர்ம அறக்கட்டளை சார்பாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரங்களை இழந்து வறுமையில் வாழும் குடும்பங்களை கண்டறிந்து, அவர்களுக்கு கொரோனா நிவாரணமாக மளிகை பொருட்கள் மற்றும் காலை சிற்றுண்டியை வழங்கி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம், வானூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரம்பை கிராமத்தில் கிஷோர் ஆர்யா அவர்களின் புதல்வி அவந்திகா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீ சிவசக்தி தர்ம அறக்கட்டளையின் சார்பில் நிறுவனர் ராஜா ராம்குமார் அவர்கள் தலைமையில் மளிகை பொருட்கள், காலை சிற்றுண்டி மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பொருளாளர் ரேணுகா, மலர்கொடி உட்பட பலர் கலந்து கொண்டனர். நிவாரணப் பொருட்களை பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து நிவாரணப் பொருட்களை வாங்கி சென்றனர்.