கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் Lipsomal – Amphotericin மருந்தை அதிக விலைக்கு விற்பனை செய்த 2 பெண்கள் உட்பட 4 நபர்கள் கைது.
கொரோனா சிகிச்சைக்கு அளிக்கப்படும் உயிர் காக்கும் ரெம்டெசிவர் மருந்து
மற்றும் கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு பயன்படும் Lipsomal – Amphotericin மருந்தை
வியாபார நோக்கத்திற்காகவும், மற்ற ஆதாயத்திற்காகவும் விற்பனை செய்பவர்களை
கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால்,
இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான
காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, ரெம்டெசிவர் மருந்து மற்றும் கருப்பு
பூஞ்சைக்கு விற்பனை செய்பவர்களையும், பதுக்கி வைத்திருப்பவர்களையும் கண்டறிந்து
நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, D-2 அண்ணாசாலை காவல் நிலைய ஆய்வாளர்
தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், நேற்று
(11.06.2021) மாலை 04.30 மணியளவில், அண்ணாசாலை, எல்.ஐ.சி பில்டிங் அருகே
கண்காணிப்பு பணியிலிருந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த 2 பெண் உட்பட 4
நபர்கள் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு பயன்படும் Lipsomal – Amphotericin
மருந்தை அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்ததின் பேரில் 4
நபர்களையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
காவல் குழுவினரின் விசாரணையில் பிடிபட்ட நபர்கள் 1.உம்முகுல்சம்,
பெண்/வ/26, த/பெ.அப்துல் மஜித், எண்.6/8, நியூ என்.ஜி.ஓ காலனி, 4வது குறுக்கு தெரு,
ஆதம்பாக்ககம் 2.பௌசானா, பெண், வ/28, க/பெ.அமீர் அப்துல் காதர், எண்.116,ஈ.சி.ஆர்
ரோடு, கானாத்தூர் 3.ராஜேஷ், வ/21, த/பெ.வேல்முருகன், எண்.96, காமராஜார் நகர்,
சங்கராபுரம், செஞ்சி, விழுப்புரம் மாவட்டம் 4.விவேக், வ/25, த/பெ.ராமநாதன், எண்.35,
ராமநாதன் தெரு, சின்னக்கரை, காட்டாங்கொளத்தூர், செங்கல்பட்டு மாவட்டம் என்பது
தெரியவந்தது. அவர்களிடமிருந்து 8 Lipsomal – Amphotericin மருந்துகள் மற்றும் 1
இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில்,
பெங்களூரிலிருந்து 15,000/- ரூபாய்க்கு வாங்கி வந்து ரூ.40,000/-க்கு விற்றது
தெரியவந்தது.
விசாரணைக்குப் பின்னர், கைது செய்யப்பட்ட 4 நபர்களும் நீதிமன்றத்தில்
ஆஜர் செய்யப்படவுள்ளனர்.