Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன்

Loading

Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன் சனிக்கிழமை – ஜூன் 12, 2021சென்னை:

பிலவ வருடம் வைகாசி 29 ஆம் தேதி ஜூன் 12,2021 சனிக்கிழமை. துவிதியைத் திதி இரவு 08.18 மணிவரை அதன் பின் திருதியைத் திதி. திருவாதிரை இரவு 09.40 மணிவரை அதன் பின் புனர்பூசம். சனிபகவான் ஆதிக்கம் நிறைந்த இன்றைய தினம் சந்திரன் மிதுன ராசியில் பயணம் செய்கிறார். விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக சுபசெலவுகள் தேடி வரும். தொழில் வளர்ச்சிக்காக அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் மன மகிழ்ச்சியை தரும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை கிடைக்கும். நன்மைகள் நிறைந்த நாளாக அமையும்.

ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இன்று உங்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். திருமண சுபமுயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும்.

மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பாதிப்புகள் நீங்கும். புதிய தொழில் தொடங்குவதற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். இன்று பிள்ளைகள் வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். திருமணப்பொருத்தம் – மகிழ்ச்சியான மண வாழ்க்கை, பிரிந்த தம்பதியர் ஒன்று சேர பரிகாரம்

கடகம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்த நிலையும் உண்டாகும். திடீர் செலவுகள் தேடி வரும். சுப முயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலை செய்யும் இடத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் தேடி வரும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் தேடி வரும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து முடித்து அதில் வெற்றியும் காண்பீர்கள். குடும்பத்தில் உடன்பிறப்புகளுடன் ஒற்றுமை பலப்படும்.

கன்னி
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். வீட்டில் பெண்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். இன்று எதிர்பாராத விதமாக மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நல்ல பலன்களைத் தரும். வேலை செய்யும் இடத்தில் கவனமும் நிதானமும் தேவை.

துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். இதுவரை வராத பழைய பாக்கிகள் கைக்கு தேடி வரும் கடன் பிரச்சினை நீங்கும்.

விருச்சிகம்
சந்திரன் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் தடைகள் தாமதங்கள் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் செய்ய நேரிடும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை. ஜாமீன் கையெழுத்துப் போட்டு யாருக்கும் பணம் கடனாக வாங்கித் தர வேண்டாம்.

தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவையும் பாராட்டுதலையும் பெறுவார்கள். வியாபார ரீதியான பிரச்சினைகள் குறைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மகரம்
சந்திரன் இன்றைய தினம் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு தேடி வரும். பணவரவு தாராளமாக இருக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களின் பொருளாதார நன்றாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவர். கடன்கள் குறையும். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் சுப செய்திகள் தேடி வரும்.

மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணப்புழக்கம் சற்று குறைவாக இருக்கும். திடீர் செலவு தேடி வரும். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிக்கனமாக செயல்படுவதன் மூலம் வீண் பிரச்சினையை தவிர்க்கலாம். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *