சட்டவிரோதமாக கள்ளத்தனமாக மதுபானங்களை கடத்தி வருவது மற்றும் விற்பனை செய்வது அதிகரிப்பு
மாவட்ட எல்லையில் மடக்கி பிடிக்கும் போலீசார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையினால் கடந்த மாதம் தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்தது. அதில் ஒன்று மதுபான கடையடைப்பு. இதனை பயன்படுத்தி சிலர் சட்டவிரோதமாக கள்ளத்தனமாக மதுபானங்களை கடத்தி வருவது மற்றும் விற்பனை செய்வது அதிகரித்து வந்த நிலையில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் பெங்களூரிலிருந்து தர்மபுரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காவல் ஆய்வாளர் துரைராஜ் தலைமையிலான காவல்துறையினர் சோதனைச் சாவடி அமைத்து சோதனை செய்ததில் கடந்த ஒரு மாத காலத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்நாடக மாநில மது டப்பாக்கள் பறிமுதல் செய்து 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய 2 நான்கு சக்கர வாகனங்கள் 19 இரண்டு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி காவல் ஆய்வாளர் துரைராஜ் பொறுப்பேற்றதில் இருந்து கொலை கொள்ளை மற்றும் கள்ளத்துப்பாக்கி என பல வழக்குகளை துரிதமாக விசாரணை செய்து குற்றவாளிகளை பிடித்துள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு மாவட்ட ஆட்சியர் சிறந்த பணிக்கான விருதினை வழங்கியுள்ளார்.