Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை ஜூன் 11, 2021 சென்னை

Loading

Today’s Rasi Palan: இன்றைய ராசி பலன் வெள்ளிக்கிழமை ஜூன் 11, 2021 சென்னை:

பிலவ வருடம் வைகாசி 28 ஆம் தேதி ஜூன் 11,2021 வெள்ளிக்கிழமை. பிரதமைத் திதி மாலை 06.31 அதன் பின் துவிதியைத் திதி. மிருகஷீரிடம் பகல் 02.30 மணிவரை அதன் பின் திருவாதிரை. சந்திரன் இன்றைய தினம் மிதுன ராசியில் பயணம் செய்கிறார். விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. சுக்கிர பகவான் ஆசி நிறைந்த இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இளைய உடன் பிறப்புக்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள்.

ரிஷபம்
சந்திரன் இரண்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். புத்துணர்ச்சி பெருகும் நாள். கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக் குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத் தில் மகிழ்ச்சி தங்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்
இன்றைய தினம் ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். கணவன் மனைவி இடையே பிரச்சினை வரலாம் கவனம் தேவை. விட்டுக்கொடுத்து செல்லவும். அலுவலகத்தில் முக்கிய பைல்களைக் கையாளும் போது அலட்சியம் வேண்டாம். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். திருமணப்பொருத்தம் – மகிழ்ச்சியான மண வாழ்க்கை, பிரிந்த தம்பதியர் ஒன்று சேர என்ன பரிகாரம்

கடகம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் செய்ய வேண்டாம். எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். உறவினர்கள், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் வரும் தவிர்க்கவும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள்.

சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப வீட்டில் பயணம் செய்கிறார். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். கிரகங்கள் சாதகமாக உள்ளது குருவின் பயணமும் சாதகமாக உள்ளதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் புகழ், கௌரவம் கூடும் நாள்.

கன்னி
சந்திரன் உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் கோபத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். வீடு, வாகனத்தை பராமரிப்பு செய்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் வெற்றிகரமாக முடியும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும் சாதனைகள் நிறைந்த நாள்.

துலாம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பணவரவு திருப்தியாக இருக்கும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தடைப்பட்ட வேலைகள் முடியும். தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.

விருச்சிகம்
சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால் உணர்ச்சி வசப்படாமல் இருங்கள். வீண் பேச்சுக்களைத் தவிர்க்கவும். குடும்பத்தினர் சிலர் உங்கள் மனம் நோகும்படி பேசுவார்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மறைமுக எதிர்ப்புகள் தேடி வரும். பொறுமையும் நிதானமும் தேவைப்படும் நாளாகும்.

தனுசு
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். திருமணம் சுபகாரிய பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். அலுவலகத்தில் திறமைகள் வெளிப்படும் நாள்.

மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். கடன் பிரச்சினை நீங்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திடீர் யோகம் தேடி வரும் நாள்.

கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங் களைச் சுற்றியிருப்பவர் களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங் களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும்.

மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்மறை எண்ணங்கள் நீங்கும் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இன்றைய தினம் மனதிற்கு இதமான செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். இன்றைய தினம் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *