நகர்ப்புற இந்தியாவை பசுமையாக்குதல்/பசுமையான நகரங்களை நோக்கி/நாளைய நகரங்களை வடிவமைத்தல் ஹர்தீப் சிங் பூரி, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சர்
நகர்ப்புற இந்தியாவை பசுமையாக்குதல்/பசுமையான நகரங்களை
நோக்கி/நாளைய நகரங்களை வடிவமைத்தல்
ஹர்தீப் சிங் பூரி, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை
அமைச்சர்
‘’ இயற்கையை அமைதிப்படுத்துதல் 21-ம் நூற்றாண்டின் வரையறுக்கும்
இலக்காகும், அது ஒவ்வொருவருக்கும் தலையாய, உயர்
முன்னுரிமையாக இருக்க வேண்டும்’’- ஐ.நா பொதுச் செயலாளர்
ஆன்டோனியோ குட்ரஸ்
1974-ம் ஆண்டு முதல் வருடந்தோறும் ஜூன் 5-ம் தேதியன்று உலகம்
முழுவதும் உள்ள மக்களும், சமுதாயமும் ஒன்று சேர்ந்து, நமது
பூமியையும், வருங்கால சந்ததியினரையும் பாதுகாக்கும் நமது கடமையை
நினைவு கூரும் உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்த ஆண்டு, பத்தாண்டுகளுக்கான இலக்குகளைக் கட்டமைப்பதாற்காக
ஐ.நா தசாப்த சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு தொடங்கப்பட்டு வருகிறது.
வளர்ச்சிக்கான அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், பசுமையான,
ஆரோக்கியமான எதிர்காலத்துக்கான நமது சமூகப் பொருளாதார,
அரசியலைக் கடைப்பிடிப்பதற்கான திறனும் அதிகரித்து வருகிறது.
நிலைத்த வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இடையே
மென்மையான சமன்பாடு, ஐ.நா 2030 நீடித்த வளர்ச்சி இலக்கு திட்டத்தின்
முக்கிய இலக்குகளில் ஒன்றாகும். இந்த இலக்குகளை அடையும்
கட்டமைப்பு அணுகுமுறை இந்தியாவின் கொள்கையில்
சேர்க்கப்பட்டுள்ளதுடன், கடந்த ஏழு ஆண்டுகால மோடி அரசின் அரசியல்
நிலைப்பாடாகவும் உள்ளது.
2030 திட்டத்தின் குறிக்கோள்; ‘ யாரையும் விட்டு விடாத’ -நீடித்த வளர்ச்சி
இலக்குகள், ‘ தொலைவில் உள்ளவர்களை முதலில் அடைதல்’ என்பது,
காந்தியடிகளின் அந்தியோதயா மூலம் சர்வோதயா என்னும் தத்துவத்தின்
சாரமாகும். இந்திய சிந்தனை மற்றும் கொள்கையின் பகுதியான இது
வழிகாட்டும் குறிக்கோளாகும். மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற
வளர்ச்சி அமைச்சகத்தின் தேசிய திட்ட செயல்பாட்டின் அடிப்படை
கருத்தும் இதுவே.
2014 ஆகஸ்ட் 15-ம் தேதி, பிரதமர் திரு நரேந்திர மோடி தூய்மை இந்தியா
இயக்கத்தைத் தொடங்கினார். அது நமது நகர்ப்புற வடிவமைப்பை
முற்றிலுமாக மாற்றியமைக்கும் முன்னோடியாக இருந்தது. 2015 ஜூன்
மாதம், உலகில் எங்கும் இல்லாத அளவில், மத்திய வீட்டு வசதி மற்றும்
நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் பிரதமர் வீட்டு வசதித் திட்டம், அடல்
மறுசீரமைப்பு மற்றும் நகரப்புற மாற்றத்துக்கான இயக்கம் (அம்ருத்),
பொலிவுறு நகரங்கள் (ஸ்மார்ட் சிட்டி) இயக்கம் ஆகிய முக்கிய
திட்டங்களை உள்ளடக்கிய மிகவும் விரிவான நகர்ப்புறமயமாக்குதல்
தொடங்கப்பட்டது.
2016-ம் ஆண்டு ஏறக்குறைய ஓராண்டு முழுவதும், மத்திய வீட்டுவசதி
மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் இந்த முக்கிய திட்டங்கள்
நீடித்த வளர்ச்சி இலக்குகளை முன்கூட்டியே தொடங்கி
செயல்படுத்தப்பட்டன. நீடித்த வளர்ச்சி இலக்குகளின் பெரும்பாலான
அம்சங்கள், இந்த முக்கிய திட்டங்களில் பிரதிபலித்தன. சமரசத்துக்கு
இடமின்றி, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நீடித்த வளர்ச்சியை
உறுதி செய்து, இந்த தேசிய திட்டங்கள் அவற்றின் இலக்குகளை எட்டின.
தூய்மை இந்தியா இயக்கம் (நகர்ப்புறம்) திடக்கழிவு மேலாண்மை
திறனைக் கட்டமைத்து திறந்தவெளி கழிப்பிடமற்ற நிலையை எட்டுவதை
நோக்கமாகக் கொண்டது. இதன் மூலம் சமூக நடைமுறையில்
மாற்றத்தை அது கொண்டு வந்தது. இந்த மக்கள் இயக்கத்தின்
பின்னணியில், ஒத்துழைப்பு மற்றும் கூட்டுறவு முக்கிய சக்தியாக
இருந்தது, வருடாந்திர தூய்மை கணக்கெடுப்பு மூலம், தெரிய வந்தது.
தூய்மை இந்தியா இயக்கத்தின் (நகர்ப்புறம்) கீழ், மேற்கொள்ளப்படும்
பல்வேறு முயற்சிகளால் 2022 வாக்கில் 17.42 மில்லியன் டன் கரியமில
வாயு உமிழ்வைக் குறைக்க முடியும்.
நமது நகரங்களின் நிர்வாகம், நிலைத்தன்மையை முன்னேற்றவும், பேரிடர்
அபாய விரிதிறனைப் பெருக்கவும் தொழில்நுட்ப மேம்பாடுகளைக்
கொண்டதாக பொலிவுறு நகரங்கள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நமது
நகர்ப்புற மையங்களில், மின்சார சேமிப்பு மற்றும் மோட்டார் இல்லாத
போக்குவரத்து திறனை மேம்படுத்துவதற்கான சிறப்பான தீர்வுகள்
செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நமது நகரங்களின் பருவநிலை-உணர்வு
மேம்பாட்டுக்கு மேலும் வலு சேர்க்க பருவநிலை மதிப்பீட்டு கட்டமைப்பு
பின்பற்றப்படுகிறது. பசுமையான, நீடித்த, விரிதிறன் கொண்ட நகர்ப்புற
குடியிருப்புகளுக்கான சர்வதேச தரத்தை அடைய, சிறந்த
நடைமுறைகளைப் பின்பற்றுதல், பரிமாறிக் கொள்ளுதல், ஒத்துழைத்தல்
ஆகியவற்றுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
இதுவரை, 417.5 கி.மீ நீளத்துக்கு சிறந்த சாலைகள், 30 மெகாவாட்
மின்சாரம் தயாரிக்கும் சூரியஒளி தகடுகள், 253.5 எம்எல்டி கழிவு நீர்
சுத்திகரிப்பு திறன் கொண்ட நிலையங்கள் ஆகியவற்றைக் கொண்ட
உள்கட்டமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. எஸ்சிஎம்-மின் கீழ்,
செயல்படுத்தப்பட்ட ஒட்டுமொத்த ஜிஎச்ஜி உமிழ்வு குறைப்பு திட்டங்கள்
2022 வாக்கில் 4.93 மில்லியன் டன் கரியமில வாயு உமிழ்வை குறைக்கும்
இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அம்ருத் திட்டத்தில், குடிநீர் விநியோகம் மற்றும் மேலாண்மை, எரிசக்தி
சேமிப்பு, பசுமை வெளிகளை அதிகரித்தல் ஆகியவை 500 நகரங்களின்
இலக்காகும். இன்று வரை, 3,700 ஏக்கர் பரப்பளவில், 1,831 பூங்காக்கள்
உருவாக்கப்பட்டுள்ளன. 85 லட்சம் தெரு விளக்குகள் மாற்றப்பட்டுள்ளன.
இதன் பயனாக, 185.33 கோடி யூனிட் மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளது. 106
நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 2022 வாக்கில் 48.52
மில்லியன் டன் கரியமில வாயு உமிழ்வைக் குறைக்க முடியும்.
1.12 கோடி வீடுகள் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதமர் வீட்டு வசதித் திட்டம்,
புதுமையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த, பேரிடருக்கு தாக்குப்பிடிக்கக்கூடிய
புதிய கட்டுமான தொழில்நுட்பங்களை நோக்கமாகக் கொண்டதாகும். உலக
வீட்டு வசதி தொழில்நுட்ப முறைகள் தொடங்கப்பட்டு, 54 புதிய
தொழில்நுட்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 2021 ஜனவரி 1-ம் தேதி ஆறு
முக்கிய கட்டமைப்புத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். நாடு
முழுவதும் ஆறு புவி –பருவநிலை மண்டலங்களில் இவற்றின்
கட்டுமானம் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன.
பிளை ஆஷ் செங்கற்கள், கான்கிரீட் கற்களைக் கொண்டு சுமார் 43.3
லட்சம் வீடுகள் கூடுதலாக கட்டப்பட்டு வருகின்றன. ஒட்டுமொத்தமாக
இந்தத் திட்டத்தின் கீழ், 2022 வாக்கில் சுமார் 12 மில்லியன் டன் கரியமில
வாயு உமிழ்வைக் குறைக்கும் ஆற்றல் உருவாகும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசியாக, மின்சார சேமிப்புக்கு ஏற்ற அதிவேக போக்குவரத்து
முறையான, மெட்ரோ ரயில் சேவை 18 நகரங்களில் 720 கி.மீ தூரப் பாதை
அமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. மேலும், 1,055 கி.மீ தூரத்துக்கு
புதிய மெட்ரோ ரயில் பாதைகள் 27 நகரங்களில் அமைக்கப்பட்டு
வருகின்றன. இந்த விரிவான கட்டமைப்பு மூலம், 2015-2022 கால
கட்டத்தில் 21.58 மில்லியன் டன் கரியமில வாயு உமிழ்வு குறைக்கப்படும்
என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தமாக, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை
அமைச்சகம் செயல்படுத்தும் தேசிய திட்டங்கள் மூலம் 2022 வாக்கில் 93
மில்லியன் டன்னுக்கும் அதிகமான அளவுக்கு கரியமில வாயு உமிழ்வு
குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களை ஒருங்கிணைத்து
செயல்படுத்துவதன் மூலமும், சிறந்த நடைமுறைகளைக் கையாளுவதன்
மூலமும் இந்த அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
தற்போது, சுற்றுச்சூழல் உணர்வு, தொழில்நுட்ப மேம்பாடு, முழுமையான
வளர்ச்சி ஆகியவற்றைக் கொண்ட மாறுதலுக்கான அலை இந்தியாவில்
நீடித்த முன்னேற்ற செயல்திட்டமாக இருந்து வருகிறது. இந்தக் கொவிட்-
19 சூழலில் சமுதாயம், இயற்கை, மேம்பாடு ஆகியவற்றுக்கு இடையிலான
சமன்பாடு சிக்கல் நிறைந்ததாக உள்ளது. பருவநிலை மாற்ற
பிரச்சினையைப் போல, தொற்றானது, உலகம் முழுவதும் சமுதாயத்தில்
பாதிக்கப்பட்ட வாய்ப்புள்ள மிகவும் அதிகமான பிரிவினரைப் பாதித்துள்ளது.
தொழில்நுட்ப ஜனநாயகமாக்கல், நீடித்த உள்கட்டமைப்பு கட்டுமானம்,
நடைமுறை மாற்றம் ஆகியவை மூலம் மாற்றம் கொண்டு
வரப்பட்டுள்ளது. இது மிகவும் தேவையுள்ளவர்களைச் சென்றடைய நமக்கு
உதவியுள்ளது.
நிலைத்தன்மை, பேரிடர் அபாய வலிமை, சமுதாய கட்டமைப்பு
ஆகியவற்றுடன் கூடிய நகர்ப்புற வளர்ச்சிக்கான முன்னேற்றப்பாதை
கடந்த ஏழு ஆண்டுகளாக மோடி அரசின் வழிகாட்டும் கவசமாக இருந்து
வருகிறது. வரும் பத்தாண்டுகளில், நமது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும்,
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் இது
உதவும்.