தர்மபுரி மாவட்டத்தில் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை பரவலாக அதிகரித்துள்ளது
தர்மபுரி மாவட்டத்தில் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை பரவலாக அதிகரித்துள்ளது, எந்தவிதமான மருத்துவமும் படிக்காதவர்களும், துணை மருத்துவம் படித்தவர்களும், செவிலியர் பட்ட படிப்பு, பட்டைய படிப்பு படித்தவர்களும், மருந்தாளுநர் படித்து முடித்தவர்கள், மருந்தகம் நடத்துநர்கள் உள்ளிட்டோரும் ஆலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவத்தை சர்வ சாதராமாக கையாண்டு வருகின்றனர்.
கொரோனா நோய் தொற்று காலம் இவர்களுக்கு மேலும் சாதகமாக உள்ளது.மருத்துவ பட்ட படிப்பு படித்த அலோபதி மருத்துவர்கள் பெரும்பாலும் நகர்புறங்களில் மட்டுமே மருத்துவம் பார்க்கின்றனர், கிராம புறங்களில் உள்ள நோயாளிகள் நகர்புறங்களுக்கு சென்று சிகிச்சை எடுத்து கொள்வதற்கு போக்குவரத்து வசதி இல்லாததாலும், இரு சக்கர வாகனத்தில் சென்றால் போலீசார் பிடித்து கொள்வார்கள் என்ற பயத்தினாலும் ,முதியோர் வாகன வசதி இல்லாதவர்கள் கிராமங்களில் உள்ள மெடிக்கல் ஸ்டோரில் மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர், இந்த சூழ்நிலையை பயன்படுத்தி பெரும்பாலான கிராம புற மெடிக்கல் ஸ்டோர் கடைக்காரர்கள் கடைக்குள்ளேயே மினி கிளினிக் நடத்தி மருத்துவம் பார்த்து வருகின்றனர்,
அதே போன்று சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதம் படித்த மருத்துவர்களும் ஆங்கில மருத்துவ மான அலோபதி மருந்துகளை நோயாளிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த கொரேனா பெரும் தொற்று நோய் காலத்தில் அரசும், சுகாதார துறையும் கொரோனா நோய் தொற்றை விரட்ட முழு மூச்சாக கவனம் செலுத்தி வரும் இந்த நேரத்தில் இந்த சூழ்நிலைையை சாதகமாக்கி பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான மாரண்டஅள்ளி, அமானி மல்லாபுரம், பெல்ரம்பட்டி, கரகூர் போன்ற பகுதிகளில் போலி டாக்டர்கள் போலி மருத்துவமனை என போலிகளால் நிரம்பி உள்ளது எனவே தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்து போலி டாக்டர்களை கைது செய்ய வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.