ஆவடியில் கொரோனா நிவாரண நிதி மற்றும் நலத்திட்ட உதவிகள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் திருவள்ளூர் கலெக்டர் பா.பொன்னையா ஆகியோர் வழங்கினர்
திருவள்ளூர் ஜூன் 10 : தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க திருவள்ளுர் மாவட்டம் ஆவடி வட்டம் ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா ஆகியோர் 222 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ரூ. 2000 கொரோனா நிவாரண உதவி தொகைகளை வழங்கினர்.
பால்வளத்துறை அமைச்சர் கூறியதாவது.
மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கொரோனா நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் குடும்ப அட்டைகள பெறாத வாரியத்தின் மூலம் அடையாள அட்டை பெற்றுள்ள மூன்றாம் பாலினத்தவர்களுக்கு முதற்கட்டமாக ரூ. 2000 வழங்கப்படுகிறது.
திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கொரோனா நிவாரண உதவித் தொகையாக நல வாரியத்தின் மூலம் அடையாள அட்டை பெற்று குடும்ப அட்டை பெறாத 222 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நிவாரண உதவித் தொகையாக தலா ரூ. 2000 வீதம் மொத்தம் ரூ. 444000 வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக 50 பயனாளிகளுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டது.
சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தில் விதவைகள் கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் ஏழை பெண்களுக்கு விலையில்லா தையல் இயந்திரம் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. 2020 – 2021 ஆம் நிதியாண்டிற்கு 125 விலையில்லா தையல் இயந்திரங்கள் ரூ. 4475 வீதம் ரூ. 559300 என்ற செலவில் வழங்கப்பட்டுள்ளது.
இதில் முதல் கட்டமாக ஆவடி தொகுதிக்குட்பட்ட 4 பயனாளிகளுக்கு ரூ. 4475 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. ஏழை பெற்றோரின் பெண்கள் விதவையரின் மகள் ஆதரவற்ற பெண்கள் மற்றும் கலப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர் மறுமணம் செய்து கொள்ளும் விதவையர் ஆகியோருக்கு உதவிடும் வகையில் ஐந்து வகையான திருமண நிதி உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 1661 பயனாளிகளுக்கு ரூ. 63393726 மதிப்பிலான 13 கிலோகிராம் தங்க நாணயங்கள் மற்றும் சுமார் ரூ. 68125000 திருமண நிதி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆவடி தொகுதிக்குட்பட்ட 11 பயனாளிகளுக்கு ரூ. 420000 மதிப்பிலான 8 கிராம் தங்க நாணயங்கள் மற்றும் திருமண நிதியுதவி வழங்கப்படுகிறது. இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் கூறினார்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) திருமதி.இராஜராஜஸ்வரி மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் தேசிங்கு ஆவடி மாநகராட்சி ஆணையர் பா.நாராயணன் ஆவடி வட்டாட்சியர் செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.